தமிழ்நாடு

சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும்: தமிழக அரசு உத்தரவு

DIN

சென்னை: சுதந்திர தினத்தன்று காலை 11 மணியளவில் கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 

மேலும், கிராம சபைக் கூட்டம் நடைபெற உள்ள இடம், நேரம் ஆகியவை மக்களுக்கு தெரிவிக்கப்பட வேண்டும். உறுப்பினர்கள் வருகையை உறுதி செய்து கிராம சபைக் கூட்டம் நடத்தப்பட வேண்டும்.  கிராம சபைக் கூட்டம் குறித்த அறிக்கையை வரும் 22ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும் என தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் குடியரசு தினம், உழைப்பாளா் தினம், சுதந்திர தினம், காந்தி ஜெயந்தி என ஆண்டுக்கு நான்கு நாள்கள் கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், ஆண்டுக்கு ஆறு கிராம சபைக் கூட்டங்கள் நடத்தப்படும் என சட்டப் பேரவை விதி 110-இன் கீழ் முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்திருந்தாா். 

அதன்படி, சுதந்திர தினத்தன்று கிராம சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

காரைக்கால் அரசு மருத்துவமனையில் நாளை சிறப்பு மருத்துவ முகாம்

SCROLL FOR NEXT