தமிழ்நாடு

'முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளது' - கேரள முதல்வருக்கு மு.க.ஸ்டாலின் கடிதம்

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். 

DIN

முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாக கேரள முதல்வர் பினராயி விஜயனுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் பதில் கடிதம் எழுதியுள்ளார். 

கடந்த ஆகஸ்ட் 5 ஆம் தேதி கேரள முதல்வர் பினராயி விஜயன், முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கடிதம் எழுதினார். அதில் 'முல்லைப் பெரியாறு நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் கனமழையை கருத்தில் கொண்டு, அணைக்கு வரும் நீரின் அளவை விட கூடுதலான அளவுக்கு நீரைத் திறந்து விடுவதை உறுதி செய்ய வேண்டும். அணையில் இருந்து நீரைத் திறந்து விடுவதற்கு ஒரு நாளைக்கு முன்பாகவே கேரள அரசுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்' என்று கூறியிருந்தார். 

இதையடுத்து அதற்கு பதில் அளிக்கும் விதமாக முதல்வர் மு.க.ஸ்டாலின் கேரள முதல்வருக்கு இன்று பதில் கடிதம் எழுதியுள்ளார். 

அதில், முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக உள்ளதாகவும் அந்த அணையிலிருந்து விதிகளின்படி தண்ணீர் திறந்து விடப்படுவதாகவும் அணைக்கு அருகில் வசிக்கும் கேரள மக்களின் பாதுகாப்பினை தமிழ்நாடு அரசு உறுதி செய்யும் எனவும் குறிப்பிட்டுள்ளார். 

'முல்லைப் பெரியாறு அணையின் கீழ்ப் பகுதியில் வசிக்கும் மக்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, எங்கள் அணை நிர்வாகக் குழு உரிய நேரத்தில் எடுக்க வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளில் மிகுந்த கவனத்துடன் செயல்படுகிறது. 

முல்லைப் பெரியாறு அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பாக உள்ளது. 2021 பிப்ரவரியில் மத்திய நீர்வள ஆணையத்தால் அங்கீகரிக்கப்பட்ட விதிகளின்படி நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது' என்று குறிப்பிட்டுள்ளார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பாலிவுட்டில் நடிக்க ஹாலிவுட் நடிகை சிட்னி ஸ்வீனிக்கு ரூ. 530 கோடி சம்பளமா?

சிறகடிக்க ஆசை தொடருக்கு குவியும் வாழ்த்து!

என்னருகில் நீ... ரிது வர்மா!

ஆப்கனில் இணைய சேவையைத் துண்டித்த தலிபான் அரசு!

ஆசிய கோப்பையை வெல்வதே ஆப்கன் மக்களின் வலிக்கான மருந்து: ஆப்கன் வீரர்

SCROLL FOR NEXT