கோப்புப்படம் 
தமிழ்நாடு

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா: பதக்கங்களை முதல்வர் வழங்குகிறார்

44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று (ஆக.9) மாலை  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

DIN

சென்னை:  44-வது செஸ் ஒலிம்பியாட் நிறைவு விழா இன்று (ஆக.9) மாலை  நடைபெறும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்று செஸ் ஒலிம்பியாட் போட்டி நிறைவு விழா சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு நடக்கிறது.

போட்டியில் வெற்றி பெற்றோருக்கு விழாவில் தங்கம், வெள்ளி, வெண்கல பதக்கங்களை முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்குகிறார். இந்நிகழ்ச்சியில் அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் மற்றும் சர்வதேச சதுரங்க கூட்டமைப்பு தலைவர் அர்கடி துவார்கோவிச் விழாவில் பங்கேற்கின்றனர்.

நிறைவு விழாவில் விஸ்வநாதன் ஆனந்த் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொள்கின்றனர்.

செஸ் ஒலிம்பியாட் போட்டிகள் சென்னைக்கு அருகேவுள்ள மாமல்லபுரத்தில் ஜூலை 28 முதல் நடைபெற்று வருகின்றன. இந்த போட்டியில், 187 நாடுகளைச் சோ்ந்த 2,500 வீரா், வீராங்கனைகள் பங்கேற்றுள்ளனர். 

முன்னதாக, நேரு உள்விளையாட்டரங்கில் நிறைவு விழா நடைபெறுவதையொட்டி,  நேற்று (ஆக.8) காலை தமிழக விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சா் சிவ.வீ.மெய்யநாதன், பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு உள்ளிட்டோர் நேரில் சென்று பார்வையிட்டனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

விலை குறையும் ஸ்விஃப்ட், டிசையர், பலேனோ, ஃபிராங்க்ஸ், பிரெஸ்ஸா வாகனங்கள்!

SCROLL FOR NEXT