தீ விபத்து நிகழ்ந்த டீ கடை 
தமிழ்நாடு

ராணிப்பேட்டை அருகே டீ கடையில் தீ  விபத்து: 5 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதி!

ராணிப்பேட்டை அருகே புதன்கிழமை அதிகாலை டீ கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

DIN

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை அருகே புதன்கிழமை அதிகாலை டீ கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் 5 பேர் படுகாயங்களுடன் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ராணிப்பேட்டை அடுத்த வானாபாடி கிராமத்தை சேர்ந்தவர் செல்வராஜ் (62), இவர் அதே பகுதியில் டீ கடை நடத்தி வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை அதிகாலை 5 மணி அளவில் வழக்கம்போல் டீ கடையில் எரிவாயு அடுப்பை பற்ற வைத்து டீ போட்டு வாடிக்கையாளருக்கு டீ கொடுத்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென எரிவாயு கசிவு ஏற்பட்டு தீ பற்றிக் கொண்டது. 

டீ கடையில் எரிவாயு கசிவு காரணமாக ஏற்பட்ட தீ விபத்தில் எரிந்து நாசமான பொருள்கள்.
 

இதில் டீ  குடிக்க வந்த ராதாகிருஷ்ணன் (55), வேணு (45), சேட்டு (70 ) சேகர் உள்ளிட்ட ஐந்து பேருக்கு லேசான தீக்காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள் அனைவரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 

இந்த தீ விபத்து சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த சிப்காட் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது

தமிழினத்தின் எழுச்சிக்கான பகுத்தறிவுப் பேரொளி பெரியார்! - முதல்வர் ஸ்டாலின் புகழாரம்

மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீஸாா் கூண்டோடு இடமாற்றம்

புதிய பொறுப்பு காத்திருக்கிறது இவர்களுக்கு: தினப்பலன்கள்!

பாலியல் தொல்லையால் பாா்வையற்றோா் பள்ளி மாணவி மரணமா?

SCROLL FOR NEXT