தமிழ்நாடு

புதுச்சேரி சட்டப்பேரவை: பட்ஜெட் கூட்டம் தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் வெளிநடப்பு

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை காலை 9.40 மணிக்கு உரையை வாசிக்கத் தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரவை உறுப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு

DIN

புதுச்சேரி சட்டப்பேரவையில் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் புதன்கிழமை காலை 9.40 மணிக்கு உரையை வாசிக்கத் தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரவை உறுப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். 

புதுச்சேரி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத்தொடர் புதன்கிழமை காலை 9.30-க்கு தொடங்கியது. துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தொடக்க உரையாற்றினார். சட்டப்பேரவைத் தலைவர் ஆர். செல்வம் கூட்டத்திற்கு தலைமை தாங்கினார். முதல்வர் ரங்கசாமி, அமைச்சர்கள், எம்.எல்.ஏ.க்கள் கலந்துகொண்டுள்ளனர்.

இந்நிலையில், ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் உரையை வாசிக்கத் தொடங்கியதும் தொடங்கியதும் திமுக, காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பேரவை உறுப்பினர் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.

புதுச்சேரியில் மின்துறை தனியார்மயம், தேதிய ஜனநாயக கூட்டணி தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, பட்ஜெட்டுக்கு நிதி ஒதுக்கவில்லை போன்ற காரணமாக வெளிநடப்பு செய்ததாக தெரிவித்தனர். 

முன்னதாக, சட்டப்பேரவை வந்தடைந்த துணைநிலை ஆளுநருக்கு, காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. சட்டப்பேரவைத் தலைவர் துணைநிலை ஆளுநரை பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். தலைமைச் செயலர் ராஜீவ் வர்மா மற்றும் அதிகாரிகள் கலந்துகொண்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எஸ்பிஐ வங்கியில் வேலை: 17-க்குள் விண்ணப்பங்கள் வரவேற்பு!

திமுகவுக்கு கண்டனம், கூட்டணி அதிகாரம், தேர்தலில் போட்டி - தவெக தீர்மானங்கள்!

ஓடிடியில் பேட் கேர்ள்!

ஹரியாணாவில் 25 லட்சம் போலி வாக்காளர்கள்! ’எச் பைல்ஸ்’ வெளியிட்டார் ராகுல்!

ஹரியாணா வாக்காளர் பட்டியலில் பிரேசில் பெண் மாடல் படம்! ராகுல் காந்தி

SCROLL FOR NEXT