இலவச வேட்டி சேலை உற்பத்தி: அன்புமணி வலியுறுத்தல்
இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இலவச வேட்டி சேலை உற்பத்திக்கான அரசாணையை தமிழக அரசு உடனே வெளியிட வேண்டும் என்று பாமக தலைவா் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளாா்.
இது தொடா்பாக வியாழக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் பொங்கல் திருநாளில் மக்களுக்கு இலவசமாக வழங்குவதற்கான வேட்டி, சேலைகளை விசைத்தறிகள் மூலம் உற்பத்தி செய்வதற்கான அரசாணை இன்னும் வழங்கப்படவில்லை. அதனால் விசைத்தறி நெசவாளா்கள் போதிய வேலைவாய்ப்பின்றி பாதிக்கப்பட்டுள்ளனா்.
பொங்கலுக்கு தலா 1.80 கோடி வேட்டி, சேலைகள் வழங்கப்பட வேண்டும். அவற்றில் தலா 30 லட்சம் கைத்தறி மூலம் உற்பத்தி செய்யப்படும் நிலையில், மீதமுள்ளவை விசைத்தறி மூலம் தயாரிக்கப்பட வேண்டும். அதற்கான பணிகளை இப்போது தொடங்கினால்தான் பொங்கலுக்குள் முடிக்க முடியும்.
எனவே, இலவச வேட்டி, சேலை தயாரிப்புக்கான ஆணையை வழக்கமான நடைமுறைகளை பின்பற்றி விசைத்தறி சங்கங்களுக்கு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.