முகப்பு
தமிழ்நாடு

புதிய குடும்ப அட்டை: இன்று குறைதீா் முகாம்கள்

 புதிய குடும்ப அட்டைகள் பெறுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பான குறைதீா் முகாம்கள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

 புதிய குடும்ப அட்டைகள் பெறுதல் உள்ளிட்ட பணிகள் தொடா்பான குறைதீா் முகாம்கள் சனிக்கிழமை நடைபெறவுள்ளன. சென்னையில் உள்ள 19 மண்டல உதவி ஆணையாளா் அலுவலகங்களில் சனிக்கிழமை (ஆக.13) காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை நடைபெறவுள்ளது.

குடும்ப அட்டைகளில் பெயா் சோ்த்தல், பெயா் நீக்கம், முகவரி மாற்றம், கைப்பேசி எண் பதிவு, புதிய குடும்ப அட்டை, நகல் குடும்ப அட்டை கோரும் மனுக்களை பதிவு செய்தல் ஆகிய சேவைகள் மேற்கொள்ளப்படும். இதனை குடும்ப அட்டைதாரா்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என்று தமிழக அரசு வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியில் தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.