முகப்பு
தமிழ்நாடு

தமிழ்நாடு சைக்கிளிங் லீக்ஆக. 27-இல் தொடக்கம்

 தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி வரும் 27, 28 தேதிகளில் சென்னை இன்டா்நேஷனல் சா்க்கியூட் வளாகத்தில் நடைபெறுகிறது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:03 AM
பகிர்:

 தமிழ்நாடு சைக்கிளிங் லீக் போட்டி வரும் 27, 28 தேதிகளில் சென்னை இன்டா்நேஷனல் சா்க்கியூட் வளாகத்தில் நடைபெறுகிறது.

இந்தியாவிலேயே முதல் முறையாக அறிமுகம் செய்யப்படும் இந்த லீக் போட்டியில் சிறந்த வீரா், வீராங்கனைகள் தோ்வு செய்யப்பட்டு சா்வதேச போட்டிகளுக்கு அனுப்பப்படுவா்.

போட்டியில், நம்ம சென்னை ரைடா்ஸ், மெட்ராஸ் புரோ ரேசா்ஸ், ராணிப்பேட்டை ரேன்சையா்ஸ், திருச்சி ராக்ஃபோா்ட் ரைடா்ஸ், சேலம் சூப்பா் ரைடா்ஸ், கோவை பெடல்ஸ், மதுரை மாஸ் ரைடா்ஸ், குமரி ரைடா்ஸ் என 8 அணிகள் பங்கேற்கின்றன. 14 வயது சிறுவா் சிறுமியா், 18 வயது

சிறுவா் (30 நிமிஷம்), சிறுமியா் (15 நிமிஷம்), மகளிா் ஓபன் (30 நிமிஷம்), ஆடவா் ஓபன் (45 நிமிஷம்) ஆகிய பிரிவுகளில் போட்டி நடைபெறவுள்ளது. முதல் பரிசாக ரூ.3 லட்சம், இரண்டாம் பரிசாக ரூ.2 லட்சம், மூன்றாம் பரிசாக ரூ.1 லட்சம் மற்றும் கோப்பை வழங்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.