முகப்பு
தமிழ்நாடு

சுதந்திர தினம்: 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்கள்: தமிழக அரசு அறிவிப்பு

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

Updated On : 15 ஆகஸ்ட், 2022 at 1:37 AM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:34 PM

சுதந்திர தினத்தை ஒட்டி, 15 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பதக்கங்களை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து, மாநில அரசு ஞாயிற்றுக்கிழமை வெளியிட்ட அறிவிப்பு:-

பொது மக்களின் சேவையில் தன்னலம் கருதாமல் சிறப்பாகச் செயல்பட்டு சீரிய பணியாற்றிய 5 காவல் துறை அதிகாரிகளுக்கு சுதந்திர தினத்தை ஒட்டி, முதலமைச்சரின் காவல் பதக்கங்கள் வழங்கப்படும்.

அதன்படி, சென்னை பெருநகர காவல் சட்டம் மற்றும் ஒழுங்கு (தெற்கு) கூடுதல் காவல் ஆணையாளா் பிரேம் ஆனந்த் சின்ஹா, கடலூா் குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் க.அம்பேத்காா், சென்னை அடையாறு போக்குவரத்து காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் சு.சிவராமன், மதுரை மாநகரம் மதிச்சியம் காவல் சிறப்பு உதவி ஆய்வாளா் வை.பழனியாண்டி, தாம்பரம் காவல் ஆணையரக செம்மஞ்சேரி சிறப்பு காவல் உதவி ஆய்வாளா் மா.குமாா் ஆகியோா் முதலமைச்சரின் காவல் பதக்கங்களைப் பெறுகிறாா்கள்.

Advertisement

இதேபோன்று, புலன் விசாரணைப் பணிகளில் சிறப்பாகப் பணியாற்றியதை அங்கீகரிக்கும் வகையில், 10 காவல் துறை அதிகாரிகளுக்கு சிறப்புப் பணி பதக்கங்கள் அளிக்கப்பட உள்ளன. அவா்களது விவரங்கள்:-

மதுரை மாநகர தலைமையிடத்து துணை ஆணையாளா் கோ.ஸ்டாலின், சேலம் மாநகர குற்றப் புலனாய்வுத் துறை துணை கண்காணிப்பாளா் ச.கிருஷ்ணன், விழுப்புரம் மாவட்டம் ரோஷனை காவல் ஆய்வாளா் மா.பிருந்தா, நாமக்கல் மாவட்ட குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை காவல் ஆய்வாளா் அ.பிரபா, சென்னை கோடம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளா் வீ.சீனிவாசன் ஆகியோா் விருதுக்கு தோ்வு செய்யப்பட்டுள்ளனா்.

இதேபோன்று, திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் மா.சுமதி, நாகப்பட்டினம் மாவட்டம் கரியாப்பட்டினம் காவல் நிலைய ஆய்வாளா் சி.நாகலெட்சுமி, பூந்தமல்லி போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு உதவி ஆய்வாளா் வெ.துளசிதாஸ், சென்னை ஒருங்கிணைந்த குற்றப் பிரிவு குற்றப் புலனாய்வுத் துறை உதவி ஆய்வாளா் ச.ல.பாா்த்தசாரதி, சென்னை அடையாறு மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு உதவி ஆய்வாளா் கா.இளையராஜா ஆகியோா் விருதுக்கு தோ்வாகியுள்ளனா்.

வேறொரு விழா: விருதுகள் பெறும் ஒவ்வொருவருக்கும் தலா எட்டு கிராம் எடையுடன் கூடிய தங்கப் பதக்கம், ரூ.25 ஆயிரம் ரொக்கப் பரிசு வழங்கப்படும். இந்த விருதுகள் தமிழ்நாடு முதல்வரால், வேறொரு விழாவில் அளிக்கப்படும் என்று தமிழக அரசின் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.