திருவாரூரில் சேதமடைந்த கொடிக் கம்பம் 
தமிழ்நாடு

திருவாரூரில் கொடிக் கம்பம் சேதம்: காவல்துறை விசாரணை

திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் சேதமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

DIN

திருவாரூர்: திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் புதிதாக அமைக்கப்பட்ட கொடிக் கம்பம் சேதமடைந்தது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

நாடு முழுவதும் சுதந்திர நாள் இன்று உற்சாகமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.

மத்திய அரசின் சார்பில் நாடு முழுவதும் அனைத்து வீடுகளிலும் தேசியக்கொடி ஏற்றுதல் மற்றும் அனைத்து அரசு நிறுவனங்களிலும் தேசியக்கொடி ஏற்றுதல் என பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் தொடர்ந்து நடைபெற்று வந்தன. 

குறிப்பாக தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் அம்ரித்சரோவர் ஜல்சக்தி அபியான் திட்டத்தின் கீழ் 75 குளங்கள் புதிதாக அமைக்கப்பட்டு அந்த குளத்தின் ஓரத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்புத் திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் தேசிய கொடிக் கம்பம் அமைத்து சுதந்திர விழாவில் தேசியக் கொடி ஏற்ற வேண்டும் என மத்திய அரசு அறிவித்திருந்தது.

அந்த வகையில், திருவாரூர் மாவட்டம் முழுவதும் அனைத்து குளங்களின் ஓரங்களிலும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தின் கீழ் கொடி மேடை மற்றும் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டிருந்தது. 

அதன்படி, திருவாரூர் அருகே புலிவலம் தாமரைக் குளத்தின் அருகில் திருவாரூர் ஊராட்சி ஒன்றியம் மற்றும் ஊரக வளர்ச்சித் துறை சார்பில் புதியதாக கொடி மேடை மற்றும் கொடிக் கம்பம் அமைக்கப்பட்டிருந்தது.  திங்கள்கிழமை காலை கொடியேற்றுவதற்காக அந்த பகுதிக்குச் சென்ற அரசு ஊழியர்கள் மற்றும் பொதுமக்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த கொடிக்கம்பம் மற்றும் கொடி மேடை உடைக்கப்பட்டு சேதமடைந்த நிலையில் இருந்ததைக் கண்டனர். இதையடுத்து திருவாரூர் தாலுகா போலீஸாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

சம்பவ இடத்திற்கு வந்த தாலுகா போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் அந்தப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்கள் பழுதடைந்துள்ள காரணத்தால் அருகில் குடியிருப்புப் பகுதியில் உள்ள சிசிடிவி கேமராக்களை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பிகார் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்ட மத்திய அமைச்சர் மீது எஃப்.ஐ.ஆர் பதிவு! -என்ன காரணம்?

பாசாங்கு எனக்கு வராது... கல்பனா சர்மா!

நூல் இழைகளின் பலம்... ப்ளூ ஜீன்ஸ்... மிமி சக்கரவர்த்தி!

ராணுவத்தைக் கட்டுப்படுத்தும் 10% பேர்: ராகுல் பேச்சால் சர்ச்சை

சரக்கு ரயில் மீது பயணிகள் ரயில் மோதி விபத்து - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT