முகப்பு
தமிழ்நாடு

மூன்று நாள்களுக்கு இந்த மாவட்டங்களில் கனமழை பெய்யுமாம்!

தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

Updated On : 16 ஆகஸ்ட், 2022 at 4:02 PM
பகிர்:
Updated On : 1 பிப்ரவரி, 2024 at 3:35 PM


தமிழகத்தில் இன்று முதல் மூன்று நாள்களுக்கு கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. 

இதுதொடர்பாக வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட தகவலில், 

தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு காரணமாக, 

Advertisement

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

நாளை (17.08.22) தமிழ்நாடு, புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். 

நீலகிரி, கோவை, ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

18.08.22 அன்று நீலகிரி, கோவை, ஈரோடு, சேலம்,  தர்மபுரி, கிருஷ்ணகிரி, கள்ளக்குறிச்சி, கடலூர், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், நாமக்கல், கரூர், திண்டுக்கல், தேனி மற்றும் திருப்பூர் மாவட்டங்கள் புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. 

சென்னையை பொருத்தவரை

அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் சில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை 36 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 27-28 டிகிரி செல்சியஸ் அளவில் இருக்கக்கூடும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.