முகப்பு
தமிழ்நாடு

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற பட்டாமணியார் அடித்துக் கொலை

வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற பட்டாமணியார் கட்டையால் அடித்துக் கொலை செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 18 ஆகஸ்ட், 2022 at 1:38 PM
கொலை செய்யப்பட்டவரின் வீடு.
பகிர்:

வேதாரண்யம்: வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற பட்டாமணியார் கட்டையால் அடித்துக் கொலை செய்தவர் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

நாகை மாவட்டம், வேதாரண்யம் அருகே ஓய்வு பெற்ற பட்டாமணியார் கட்டையால் அடித்துக் கொலை செய்யப்பட்டது வியாழக்கிழமை (ஆக. 18) காலை தெரிய வந்தது.

கருப்பம்புலம் கிராமத்தில் வேதாரண்யம் - வாய்மேடு பிரதான சாலை பகுதியில் தனியாக மாடி வீடு கட்டி வசித்து வந்தவர் இரத்தினசபாபதி (82) இவருக்கு இரு மனைவிகள். இருவரும் இறந்து விட்டனர்.

Advertisement

இரு மகன்களில் ஒருவர் இறந்து விட்ட நிலையில், மற்றொருவர் வெளியூரில் குடும்பத்தாருடன் வசிக்கிறார். ஒரு மகள் திருமணம் செய்து வெளியூரில் வசித்து வருகிறார். 

இந்த நிலையில் கருப்பம்புலத்தில் உள்ள மாடி வீட்டில் ரத்தினசபாபதி தனியாக வசித்து வந்தார்.

வீட்டுக்கு வெளியே வாசல் பகுதியில் கட்டிலில் உறங்கிய இவர், தலையில் கட்டையால் அடித்த காயங்களுடன் இறந்து கிடந்தது தெரிய வந்தது.

இது குறித்து வேதாரண்யம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.