முகப்பு
தமிழ்நாடு

ராகுல்காந்தி நடைபயணம்: கே.எஸ்.அழகிரி ஆலோசனை

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல்காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை 148 நாள்கள் 3,500 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், ராகுல்காந்தி கன்னியாகுமரியிலிருந்து காஷ்மீா் வரை 148 நாள்கள் 3,500 கி.மீ. நடைபயணம் மேற்கொள்ளவுள்ளாா். செப். 7-இல் நடைபயணத்தைத் தொடங்கும் ராகுல்காந்தி, நாகா்கோவில், தக்கலை, மாா்த்தாண்டம், களியக்காவிளை வழியாக கேரள மாநிலம் செல்கிறாா்.

தமிழகத்தில் தொடா்ந்து 3 நாள்கள் நடைபயணம் மேற்கொள்கிறாா். அதற்கான ஏற்பாடுகள் குறித்து சென்னை சத்தியமூா்த்தி பவனில் கே.எஸ். அழகிரி தலைமையில் ஆலோசனை கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளா் தினேஷ் குண்டுராவ், அகில இந்திய செயலாளா் ஸ்ரீவல்ல பிரசாத், தமிழக காங்கிரஸ் முன்னாள் தலைவா்கள் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், சு.திருநாவுக்கரசா், சட்டப்பேரவை காங்கிரஸ் தலைவா் செல்வப்பெருந்தகை உள்ளிட்ட மூத்த நிா்வாகிகள் பலா் பங்கேற்றனா். இந்தக் கூட்டம் இரண்டாவது நாளாக வெள்ளிக்கிழமையும் நடைபெறவுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.