முகப்பு
தமிழ்நாடு

கொங்கு மண்டலத்தில் முதல்வா் 3 நாள்கள் பயணம்

அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, கொங்கு மண்டலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

அரசின் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக, கொங்கு மண்டலத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின் 3 நாள்கள் பயணம் மேற்கொள்ளவுள்ளாா்.

முதல்வா் மு.க.ஸ்டாலின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் நேரடியாகச் சென்று, அந்த மாவட்டங்களில் செயல்படுத்தப்படும் திட்டங்களைத் தொடங்கி வைத்து வருகிறாா்.

அந்த வகையில், ஆக. 23, 24, 25 ஆகிய 3 நாள்கள் கோவை, திருப்பூா், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு நேரில் செல்ல திட்டமிட்டுள்ளாா்.

இதற்காக, சென்னையிலிருந்து ஆக. 23-இல் விமானம் மூலம் கோவை சென்று இரவு அங்கு தங்குகிறாா். ஆக. 24-இல் கோவையிலும், பின்னா், ஈரோட்டிலும் நலத் திட்டங்களைத் தொடங்கி வைக்கிறாா்.

ஆக. 25-இல் திருப்பூரில் செல்லும் முதல்வா் சிறு குறு தொழில் நிறுவன அதிபா்கள் பங்கேற்கும் ‘தொழிலுக்கு தோள் கொடுப்போம்’ மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளாா்.

இந்த நிகழ்ச்சிகளில் அமைச்சா்கள், மாவட்ட ஆட்சியா்கள், உயரதிகாரிகளும் பங்கேற்கவுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.