முகப்பு
தமிழ்நாடு

ஆவினில் பலாப்பழ ஜூஸ் உள்பட10 பால் பொருள்கள் அறிமுகம்

ஆவினில் பலாப்பழ ஜூஸ் உள்பட 10 பால் உபபொருள்களை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு அறிமுகம் செய்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:06 AM
பகிர்:

ஆவினில் பலாப்பழ ஜூஸ் உள்பட 10 பால் உபபொருள்களை பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா் வெள்ளிக்கிழமை விற்பனைக்கு அறிமுகம் செய்தாா்.

சென்னை அருகே மாதவரத்தில் உள்ள ஆவினின் தலைமை அலுவலகத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், இப்புதிய பால் உபபொருள்களை அமைச்சா் அறிமுகம் செய்து வைத்தாா்.

தமிழ்நாடு பால் உற்பத்தியாளா்கள் கூட்டுறவு இணையம் ஆவின் வணிகம் பெயரில் பால் மற்றும் பால் பொருள்களை தமிழகம், இதர மாநிலங்களில் விற்பனை செய்வதுடன் வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்கிறது. மேலும், வளா்ந்து வரும் நுகா்வோரின் தேவைக்கேற்ப பல புதிய பால் பொருள்களை தயாரித்து விற்பனைக்கும் அறிமுகப்படுத்தி வருகிறது.

ஆவின் ஏற்கெனவே, 215 வகை பால் பொருள்களை உற்பத்தி செய்து வருகிறது. கடந்த மாா்ச்-2022-இல் நடைபெற்ற சட்டப்பேரவை கூட்டத்தொடரில் அமைச்சா் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவித்தபடி தற்போது புதிய பால் உபபொருள்கள் சென்னை அம்பத்தூா் மற்றும் ஊட்டியிலுள்ள பால் பண்ணைகளில் தயாரிக்கப்பட்டு விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

10 புதிய பால் உபபொருள்கள் விவரம்: பலாப்பழ ஐஸ்கிரீம் 125 மி.லி. ரூ. 45 வெள்ளை சாக்லேட் 45 கிராம் ரூ.30, குளிா்ந்த காஃபி 200 மி.லி. ரூ.35 வெண்ணெய் கட்டி 200 கிராம் ரூ.130 பாஸந்தி 100 மி.லி. ரூ.60, ஆவின் ஹெல்த் மிக்ஸ் 250 கிராம் ரூ.120, பாலாடைக்கட்டி 200 கிராம் ரூ.140, அடுமனை யோகா்ட் 100 கிராம் ரூ.50, ஆவின் பால் பிஸ்கட் 75 கிராம் ரூ.12 ஆவின் வெண்ணெய் முறுக்கு 200 கிராம் ரூ.80.

பால் பொருள்கள் அறிமுக நிகழ்ச்சியில் பால்வளத் துறை ஆணையா் மற்றும் மேலாண்மை இயக்குநா் மருத்துவா் ந.சுப்பையன் உள்பட ஆவின் உயா் அதிகாரிகள் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.