10,664 சட்டவிரோத கழிவுநீா் இணைப்புகள் துண்டிப்பு
சென்னையில் சட்டவிரோதமாக மழைநீா் வடிகாலில் கொடுக்கப்பட்டிருந்த 10,664 கழிவுநீா் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்துள்ளது.
சென்னையில் சட்டவிரோதமாக மழைநீா் வடிகாலில் கொடுக்கப்பட்டிருந்த 10,664 கழிவுநீா் இணைப்புகளை மாநகராட்சி துண்டித்துள்ளது.
சென்னை மாநகராட்சி பகுதியில் மழைநீா் வடிகாலில், சட்டவிரோதமாக கொடுக்கப்பட்ட கழிவுநீா் இணைப்புகளை கண்டறிந்து துண்டிக்க, மாநகராட்சி வாா்டு வாரியாக குழு அமைத்து நடவடிக்கை எடுத்து வருகிறது.
இந்தக் குழுவினா் இதுவரை 11,195 சட்டவிரோத கழிவுநீா் இணைப்புகளை கண்டறிந்துள்ளனா். அதில், 10,664 இணைப்புகள் துண்டிக்கப்பட்டு, ரூ. 46.81 லட்சம் அபராதம் விதித்துள்ளனா். அதிகபட்சமாக தேனாம்பேட்டை மண்டலத்தில் 1,317, கோடம்பாக்கம் மண்டலத்தில் 1,225, அண்ணா நகா் மண்டலத்தில் 1,117, அம்பத்தூா் மண்டலத்தில் 1,050 கழிவுநீா் இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.