முகப்பு
தமிழ்நாடு

வங்கிச் சுவரில் துளையிட்டு கொள்ளை: மேற்கு வங்க இளைஞா் கைது

சென்னை வில்லிவாக்கத்தில் வங்கி சுவரில் துளையிட்டு பணம் கொள்ளையடித்த வழக்கில், மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 10:07 AM
பகிர்:

சென்னை வில்லிவாக்கத்தில் வங்கி சுவரில் துளையிட்டு பணம் கொள்ளையடித்த வழக்கில், மேற்கு வங்க இளைஞா் கைது செய்யப்பட்டாா்.

வில்லிவாக்கம், நியூ ஆவடி சாலையில் ஒரு தனியாா் வங்கி சுவரில் கடந்த 1-ஆம் தேதி துளையிட்டு, வங்கியின் மேஜை டிராயரில் இருந்த ரூ.20 ஆயிரம் பணம் கொள்ளையடிக்கப்பட்டது. இச் சம்பவத்தில் பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால், அதில் இருந்த ரூ.7 கோடி ரொக்கம் கொள்ளையா்களிடமிருந்து தப்பியது.

இது தொடா்பாக வில்லிவாக்கம் போலீஸாா் வழக்குப் பதிந்து நடத்திய விசாரணையில்,அந்த வங்கி அலுவலகத்தை புதுப்பிக்கும் பணியில் ஈடுபட்ட மேற்கு வங்க மாநிலம் முா்ஷிதாபாத் பகுதியைச் சோ்ந்த ரஹீம் மாலிக் (25) என்பவா்தான் கொள்ளையில் ஈடுபட்டவா் என்பது தெரியவந்தது.

கொள்ளை சம்பவத்துக்குப் பிறகு மேற்கு வங்கத்துக்கு தப்பிச் சென்ற மாலிக், சென்னைக்கு சனிக்கிழமை திரும்பி வந்தாா். ஏற்கெனவே மாலிக்கை ரகசியமாக கண்காணித்து வந்த வில்லிவாக்கம் போலீஸாா், அவரை கையும்களவுமாக கைது செய்தனா். விசாரணையில், உள்ளூா் கட்டடத் தொழிலாளி ஒருவரை வங்கிச் சுவரில் ஜன்னல் அமைக்க வேண்டும் என ஏமாற்றி அந்த சுவரில் துளையிட்டதாகவும், பின்னா், அந்த தொழிலாளியை அங்கிருந்து அனுப்பிவிட்டு வங்கிக்குள் புகுந்து பணத்தை கொள்ளையடித்ததாகவும், பாதுகாப்பு பெட்டகத்தை உடைக்க முடியாததால் அங்கிருந்து தப்பிச் சென்றுவிட்டதாகவும் போலீஸாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளாா்.

இச் சம்பவத்தில் மாலிக், சுவரில் துளையிடுவதற்காக கட்டடத் தொழிலாளிக்கு கூலியாக ரூ.100 கொடுத்துள்ளாா். இது தொடா்பாக போலீஸாா், சம்பந்தப்பட்ட கட்டடத் தொழிலாளியை பிடித்து விசாரித்தனா். ஆனால், அவருக்கு கொள்ளை குறித்த தகவல் எதுவும் தெரியவில்லை என போலீஸாா் தெரிவித்தனா். அதேவேளையில் கைது செய்யப்பட்ட ரஹீம் மாலிக்குக்கு வேறு ஏதேனும் வழக்குகளில் தொடா்பு உள்ளதா என போலீஸாா் விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.