சீர்மிகு நகரங்கள் திட்ட முறைகேடுகள்: ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது விசாரணை ஆணையம் 
தமிழ்நாடு

சீர்மிகு நகரங்கள் திட்டத்தில் முறைகேடு: ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது விசாரணை ஆணையம்

தமிழகத்தில் சீா்மிகு நகரங்கள் திட்டங்களில் நடைபெற்ற முறைகேட்டுப் புகாா்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது

DIN

தமிழகத்தில் சீா்மிகு நகரங்கள் திட்டங்களில் நடைபெற்ற முறைகேட்டுப் புகாா்கள் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் இன்று சமர்ப்பித்தது.

மத்திய அரசால் கடந்த 2015ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட சீர்மிகு நகரங்கள் திட்டத்தின்படி தமிழ்நாட்டில் சென்னை, மதுரை, கோவை, தஞ்சாவூர், சேலம், வேலூர், திருப்பூர், தூத்துக்குடி, திருநெல்வேலி, ஈரோடு மற்றும் திருச்சி ஆகிய மாநகராட்சிகளில் சீர்மிகு நகரப் பணிகள் நடைபெற்று வந்தன. மொத்தம் 11 பெருநகரங்களுக்கு மொத்தமாக 644 திட்டங்கள் வரையறுக்கப்பட்டு ரூ.10,651 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தன. 

இந்நிலையில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றத்திற்குப் பிறகு சீர்மிகு திட்டத்தில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்து ஆய்வி செய்ய ஓய்வு பெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி பி.டபிள்யூ.சி.டேவிதார் தலைமையில் ஒருநபர் ஆணையத்தை அமைத்து கடந்த மார்ச் மாதம் தலைமை செயலர் வெ.இறையன்பு அறிவிப்பு வெளியிட்டார். 

சீர்மிகு நகரங்கள் திட்டப்பணிகள் 3 மாதங்களில் அறிக்கை தாக்கல் செய்ய அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் விசாரணை ஆணையம் தனது அறிக்கையை இன்று முதல்வர் மு.க.ஸ்டாலினிடம் தாக்கல் செய்தது. ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி பி.டபிஸ்யூ.சி.டேவிதார் சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து தனது அறிக்கையை வழங்கினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

2027 ஒருநாள் உலகக் கோப்பையில் விளையாட விரும்பினால்... ரோஹித், கோலி செய்ய வேண்டியதென்ன?

உலக ஜிம்னாஸ்டிக் சாம்பியன்ஷிப் போட்டியில் பங்கேற்க இஸ்ரேல் வீரர்களுக்குத் தடை!

அதிபர் டிரம்ப்புடன் பிரதமர் மோடி தொலைபேசியில் பேச்சு!

கரூர் பலி: தவெக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளர் கைது!

தில்லியில் பாலஸ்தீனத்துக்கு ஆதரவாக இடதுசாரி கட்சிகள் போராட்டம்!

SCROLL FOR NEXT