தமிழ்நாடு

கரூர் ஆட்சியர் அலுவலகத்தில் பரபரப்பு... லிஃப்ட்டில் சிக்கிக்கொண்ட 10 பேரும் பத்திரமாக மீட்பு!

கரூர் ஆட்சியர் அலுவலத்தில் உள்ள லிஃப்ட் திடீரென பழுதானதால் சிக்கிக்கொண்ட பத்து பேரும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

DIN


கரூர் ஆட்சியர் அலுவலத்தில் உள்ள லிஃப்ட் திடீரென பழுதானதால் சிக்கிக்கொண்ட பத்து பேரும் தீயணைப்புத் துறையினரின் உதவியுடன் பத்திரமாக மீட்கப்பட்டனர். 

கரூர் ஆட்சியர் அலுவலகத்தின் 2 ஆவது தளத்தில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசனின் நிகழ்ச்சி நடைபெற்றது. 

இதில் பங்கேற்பதற்காக அலுவலகத்தில் உள்ள லிஃப்ட்டில் மக்கள் சென்றுள்ளனர். அப்போது, திடீரென லிஃப்ட் பழுதானதால் மக்கள் 10 பேர் உள்ளேயே சிக்கிக்கொண்டனர். 

இதுகுறித்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட்டு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர், லிஃப்ட்டின் கதவை உடைத்து உள்ளே சிக்கியிருந்து மக்கள் 10 பேரையும் பத்திரமாக மீட்டனர். 

இந்த சம்பவம் ஆட்சியர் அலுவலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

விஜய் பிரசாரத்துக்கு அனுமதி: காவல் துறைக்கு உத்தரவிடக் கோரி உயா்நீதிமன்றத்தில் மனு

பிரதமா், அவரின் தாயாா் தொடா்பான ஏஐ விடியோவை நீக்க வேண்டும்: காங்கிரஸுக்கு பாட்னா உயா்நீதிமன்றம் உத்தரவு

பெண் கல்வி: நாட்டின் முதலீடு!

புலிகளுக்கு ஆபத்து: உச்ச நீதிமன்றத்தில் பொதுநல மனு தாக்கல் -மத்திய அரசு, சிபிஐ உள்ளிட்டவற்றிற்கு நோட்டீஸ்

கொள்முதல் நிலையங்களில் கண்காணிப்புக் குழுக்களை அமைக்க வலியுறுத்தல்

SCROLL FOR NEXT