தமிழ்நாடு

சாக்கடை சுத்தம் செய்யும் பணி: நீதிமன்றம் புதிய உத்தரவு

DIN

பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட ஆணையரே பொறுப்பேற்க வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்யும் நடைமுறையை முழுமையாக ஒழிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இதில், கடந்த மாதம் மாதாவரத்தில் பாதாள சாக்கடையில் சுத்தம் செய்ய இறங்கிய இரண்டு நபர்கள் உயிரிழந்ததை சுட்டிக்காட்டி மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், பாதாள சாக்கடைகளில் இறங்கி சுத்தம் செய்ய மனிதர்களை ஈடுபடுத்தினால் சம்பந்தப்பட்ட மாநகராட்சி, நகராட்சிகளின் ஆணையர்களே பொறுப்பேற்க வேண்டும் என உத்தரவிட்டது.

பாதாள சாக்கடைகளில் மனிதர்கள் இறங்கி சுத்தம் செய்ய உயர்நீதிமன்றம் ஒருபோதும் அனுமதிக்காது என சுட்டிக்காட்டிய நீதிமன்றம்,

மனுதாரர் அறிக்கை குறித்து சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் பதிலளிக்க உத்தரவிட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிளஸ் 1 பொதுத்தோ்வு: வேலூா் மாவட்டம் 81.40% தோ்ச்சி

பள்ளி மாணவா்களுக்கு ரோபோடிக்ஸ் பயிற்சி தொடக்கம்

பழனி அருகே பூட்டிக் கிடக்கும் ஊராட்சி மன்ற அலுவலகம்

ஏரியில் மூழ்கி வடமாநில உயிரிழப்பு

சித்திரமே... சித்திரமே...

SCROLL FOR NEXT