தனி நீதிபதி உத்தரவால் அதிமுக செயல்பட முடியாதநிலை 
தமிழ்நாடு

தனி நீதிபதி உத்தரவால் அதிமுக செயல்பட முடியாதநிலை: இபிஎஸ் தரப்பு

சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று இபிஎஸ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

DIN


சென்னை: சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதி உத்தரவால் தமிழகத்தின் முக்கிய எதிர்க்கட்சியான அதிமுக செயல்பட முடியாத நிலை ஏற்பட்டுள்ளது என்று இபிஎஸ் தரப்பில் வாதம் முன் வைக்கப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது என்ற தனி நீதிபதியின் உத்தரவை எதிா்த்து எடப்பாடி பழனிசாமி தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தின் இரு நீதிபதிகள் அமா்வில் கடந்த வியாழக்கிழமை முறையீடு செய்யப்பட்டது.

இந்த மனு இன்று விசாரணைக்கு வந்த போது, அதிமுகவில் பொதுக்குழு முடிவே இறுதியானது.  எனவே அதை ஏற்பவர்களே அடிப்படை உறுப்பினர்களாக நீடிக்க முடியும் என்றும் எடப்பாடி பழனிசாமி தரப்பில் கூறப்பட்டுள்ளது.

அதிமுக பொதுக் குழு கூட்டத்தை எதிா்த்து ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், பொதுக் குழு உறுப்பினா் வைரமுத்து ஆகியோா் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்த சென்னை உயா்நீதிமன்ற நீதிபதி ஜெயச்சந்திரன், ‘சென்னையில் கடந்த ஜூலை 11-இல் நடைபெற்ற அதிமுக பொதுக் குழு கூட்டம் செல்லாது. அதிமுகவில் கடந்த ஜூன் 23-ஆம் தேதிக்கு முன்பு இருந்த நிலையே நீடிக்க வேண்டும்’ என்று புதன்கிழமை (ஆக. 17) தீா்ப்பளித்தாா்.

இந்நிலையில், தனி நீதிபதியின் தீா்ப்பை எதிா்த்து உயா்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தா்மோகன் ஆகியோா் அடங்கிய அமா்வு முன் எடப்பாடி பழனிசாமி சாா்பில் மூத்த வழக்குரைஞா் விஜய்நாராயண் வியாழக்கிழமை மேல்முறையீடு செய்தாா். இன்று இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வருகிறது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சத்தீஸ்கரில் 2 ரயில்கள் மோதி விபத்து: 4 பேர் பலி

”என்னைக் கொலைசெய்ய அன்புமணி 15 பேர் அனுப்பியுள்ளார்” அருள் பரபரப்புப் பேட்டி

என் மேல் ஒளிரும் சூரியன்... பூஜிதா பொன்னாடா!

அன்னிய நிதி வெளியேற்றத்தால் சென்செக்ஸ் 519 புள்ளிகள் சரிவுடன் நிறைவு!

சரும அழகைக் கெடுக்கும் பானங்கள்! பளபளப்பான சருமத்திற்கு இதைச் செய்யுங்கள்!

SCROLL FOR NEXT