தமிழ்நாடு

காரைக்கால் ஆட்சியரகம் முற்றுகைப் போராட்டம்: உள்ளாட்சி ஊழியர்கள் 200 பேர் கைது

DIN

காரைக்கால் :  காரைக்கால் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் 200  பேரை போலீசார் கைது  செய்தனர்.

உள்ளாட்சி ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கு பட்ஜெட்டில் நிதி ஒதுக்கி அரசே நேரடியாக ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்கிற முதல்வரின் வாக்குறுதி நிறைவேற்றப்படவேண்டும். 7-ஆவது ஊதியக்குழு பரிந்துரைகளை அரசு ஊழியர்களுக்கு வழங்கியது போல் 1.1.2016 முதல் நிலுவைத் தொகைகளை வழங்க வேண்டும். 

பணி  நிரந்தரம்,  பதவி உயர்வு வழங்க வேண்டும். நிலுவையில் உள்ள மாத ஊதியம், ஓய்வூதியத்தை வழங்கவேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, காரைக்கால் நகராட்சி மற்றும்  கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் கூட்டு போராட்டக் குழு சார்பில், ஊழியர்கள் 4 நாள்களாக வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

காரைக்கால் ஆட்சியரகத்தை வியாழக்கிழமை முற்றுகையிட்டு போராட்டம் நடத்திய நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள்.

இந்நிலையில், 4-ஆம் நாளான வியாழக்கிழமை 12.30 மணியளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். ஆட்சியரகத்துக்கு செல்ல முடியாத வகையில் போலீசார் தடுப்புகளை அமைத்திருந்ததால், அங்கேயே மறியலில் ஈடுபட்டனர்.

போராட்டத்திற்கு காரை மாவட்ட நகராட்சி மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் கூட்டு போராட்டக்குழு கன்வீனர் அய்யப்பன் தலைமை வகித்தார். காரை பிரதேச அரசு ஊழியர் சங்கத் தலைவர் சுப்ரமணியன், பொதுச் செயலாளர் எம்.ஷேக் அலாவுதீன் உள்ளிட்டோர் உள்ளிட்ட 200 பேரை போலீசார் கைது செய்தனர்.

செய்தியாளர்களிடம் போராட்டக் குழு கன்வீனர் அய்யப்பன் கூறுகையில், நடைபெற்றுவரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் இப்பிரச்னைக்கு தீர்வு ஏற்படும் வகையில் அறிவிப்பு வெளியிடவேண்டும். இல்லையெனில் ஊழியர்கள் போராட்டம் வலிமை மிக்கதாக இருக்கும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எலக்சன் படத்தின் வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

சிவகார்த்திகேயனின் ‘குரங்கு பெடல்’ டிரெய்லர்!

உதகை, கொடைக்கானல் செல்பவர்களுக்கு இ-பாஸ்!

ரசவாதி படத்தின் டிரெய்லர்

ஐரோப்பாவின் சாதனைப் பெண்மணி தெரேசா விசெண்டேவுக்கு ’பசுமை நோபல்’ விருது

SCROLL FOR NEXT