திருச்செந்தூரில் ஆவணித்திருவிழாவின் பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை காலை நடைபெற்ற தேரோட்டம் 
தமிழ்நாடு

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா தேரோட்டம் கோலாகலம்

திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் கோலாகலமாக  நடைபெற்றது. 

DIN

திருச்செந்தூர்: திருச்செந்தூரில் ஆவணித் திருவிழா பத்தாம் நாளான வெள்ளிக்கிழமை காலை தேரோட்டம் கோலாகலமாக நடைபெற்றது. 

சுவாமி தேர்

திருச்செந்தூரில் பிரசித்திப் பெற்ற ஆவணித் திருவிழா கடந்த ஆக. 17 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தேரில் வள்ளி, தெய்வானையுடன் எழுந்தருளிய சுவாமி குமரவிடங்கப்பெருமான்

விழா நாள்களில் காலை, மாலை இரு வேளைகளிலும் சுவாமி, அம்மன் தனித்தனி வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தனர்.

பிள்ளையார் ரதம்

திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் வெள்ளிக்கிழமை காலை நடைபெற்றது. காலை 6.15 மணிக்கு பிள்ளையார் தேரும், காலை 6.45 மணிக்கு சுவாமி குமரவிடங்கப்பெருமான் வள்ளி, தெய்வானையுடன் பெரிய தேரிலும், காலை 7.50 மணிக்கு வள்ளியம்மன் சிறிய தேரிலும் எழுந்தருளி வீதி உலா வந்து நிலைக்கு வந்தது. 

அம்மன் தேர்

நிகழ்ச்சியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு வெற்றிவேல் முருகனுக்கு அரோகரா என்ற கோஷத்துடன் வடம் பிடித்து தேர் இழுத்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆம்ஸ்ட்ராங் இறுதிச்சடங்குக்கு சென்றதுகூட சாதி ரீதியாகப் பார்க்கப்பட்டது!-Mallai Sathya | DuraiVaiko | Vaiko

வாக்குத் திருட்டு விவகாரம்: யாரும் தப்பிக்க முடியாது – ராகுல் காந்தி எச்சரிக்கை!

காரில் ஏற்ற மறுத்தாரா எடப்பாடி பழனிசாமி? செல்லூர் ராஜு விளக்கம்

உள்நோக்கத்துடன் செய்யப்பட்ட கொலை..! ஆசிப் குரேஷியின் மனைவி பேட்டி!

பிளஸ் 1 பொதுத்தேர்வு ரத்து!8ஆம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி தொடரும்!அன்பில் மகேஸ் பேட்டி

SCROLL FOR NEXT