தமிழ்நாடு

பள்ளிகளில் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்ப வழிகாட்டுதல்கள் வெளியீடு

DIN

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் வெளியிடுவது குறித்த வழிகாட்டுதல்களை பள்ளிக்கல்வித் துறை வெளியிட்டுள்ளது. 

அரசுப் பள்ளிகளில் 6 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு சிறார் திரைப்படங்கள் திரையிடப்பட வேண்டும்.

திரைப்படங்களின் சிந்தனை, செயல்திறன், மாணவர்களின் செயல்பட்டில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் ஒவ்வொரு மாதமும் சிறார் திரைப்படங்கள் ஒளிபரப்பப்பட வேண்டும்.  

இதற்காக ஒவ்வொரு மாதமும் திரையிடப்பட வேண்டிய படங்கள் குறித்த பரிந்துரையை பள்ளிக்கல்வித்துறை அனுப்பும். 

திரைப்படத்துக்கென ஒதுக்கப்பட்ட பாட வேளைகளில் மட்டுமே சிறார் படங்களை திரையிட வேண்டும்.

திரைப்படங்களைத் திரையிடும் முன்பும், பின்னரும் அதுகுறித்து மாணவர்களிடம் ஆசிரியர்கள் கலந்துரையாட வேண்டும். 

திரைப்படம் முடிந்தபின்பு அதுகுறித்த விமர்சனத்தை மாணவ, மாணவிகள் எழுதித் தர வேண்டும் உள்ளிட்ட வழிகாட்டுதல்கள் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அடுத்த 3 மணி நேரத்தில் எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?

கோவிஷீல்டு தடுப்பூசியை திரும்பப் பெறுவதாக அறிவிப்பு!

வேங்கைவயல் விவகாரம்: மேலும் 3 பேருக்கு இன்று குரல் மாதிரி சோதனை

சவுக்கு சங்கர் மீது சென்னை காவல்துறையும் வழக்கு!

வெப்ப அலை: தொழிலாளா்கள் பாதிக்காத வகையில் பணி நேரம்

SCROLL FOR NEXT