தமிழ்நாடு

ராஜாத்தி அம்மாள் சிகிச்சைக்காக ஜெர்மனி பயணம்

கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.  

DIN

கருணாநிதி மனைவி ராஜாத்தி அம்மாள் சிகிச்சைக்காக ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் மனைவியும் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழியின் தாயாருமானவர் ராஜாத்தி அம்மாள். இவர்  கடந்த சில மாதங்களாக செரிமானக் கோளாறு காரணமாக அவதிப்பட்டு வருகிறார். 

இதற்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அவர் அண்மை நாள்களாக சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் ராஜாத்தி அம்மாள் உயர் சிகிச்சை பெறுவதற்காக இன்று ஜெர்மனி அழைத்துச் செல்லப்பட்டுள்ளார். 

அவருடன் கனிமொழி எம்பி மற்றும் குடும்ப உறுப்பினர்களும் சென்றனர். ராஜாத்தி அம்மாள் ஜெர்மனியில் 2 வாரங்கள் தங்கி இருந்து சிகிச்சை பெற்று மீண்டும் சென்னை திரும்புவார் எனக் கூறப்படுகிறது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

திமுகவை விமா்சிக்காமல் கட்சிகள் அரசியலில் இருக்க முடியாது: வி.செந்தில்பாலாஜி

அந்நியச் செலாவணி கையிருப்பு 68,895 கோடி டாலராக உயா்வு

தென் மாநிலங்களில் பாஜக வலிமையான வளா்ச்சி: தேசிய செயல் தலைவா் நிதின் நபின்!

ஓய்வு பெறுகிறாா் 3 முறை கிராண்ட்ஸ்லாம் சாம்பியன் ஸ்டேன் வாவ்ரிங்கா

ஆலங்குடி நூலகத்தில் பயின்று டிஎன்பிஎஸ்சி தோ்வில் வென்ற பெண்ணுக்கு பாராட்டு!

SCROLL FOR NEXT