கோப்புப் பட்ம் 
தமிழ்நாடு

கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: வன்புணர்வோ, கொலையோ இல்லை - நீதிமன்றம் 

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி உறுதியாவதாக உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

DIN

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி உறுதியாவதாக உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் கனியாமூா் பகுதியில் உள்ள தனியாா் பள்ளியில் படித்துவந்த கடலூா் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஒருவா் மரணமடைந்தாா். இதுதொடா்பாக மாணவியின் தாய் செல்வி கொடுத்த புகாரின் பேரில் சின்னசேலம் காவல்துரையினர் வழக்குப் பதிவு செய்தனா்.

தமிழ்நாடு அரசு மருத்துவ குழுக்களின் இரு உடற்கூறாய்வு அறிக்கைகள் மற்றும் ஜிப்மர் மருத்துவர் குழு அறிக்கையின்படி கருத்து கனியாமூர் பள்ளி மாணவி மரணம் வன்புணர்வோ, கொலையோ இல்லை  என உறுதியாவதாக உயர்நீதி மன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

பெற்றோரின் குற்றச்சாட்டுகளுக்கு ஆதாரம் இல்லை. தற்கொலை கடிதம், சக மாணவிகளின் சாட்சியம் அடிப்படையில் மாணவி வேதியலில் சிரமப்பட்டுள்ளார் எனத் தெரிகிறது. இரு ஆசிரியர்களும் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதற்கு ஆதாரங்கள் இல்லை. போதிய ஆதாரங்கள் இல்லாத நிலையில் தற்கொலைக்கு தூண்டிய பிரிவின் கீழ் வழக்குப்பதிவு செய்ததும் தவறு. நன்றாக படிக்க சொல்வது ஆசிரியர் பணியில் ஒரு அங்கமாகுமே தவிர, தற்கொலைக்கு தூண்டும் செயல் அல்ல என நீதிபதி கூறினார். 

கனியாமூர் பள்ளி மாணவி இறப்பு வழக்கில் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியைகளுக்கு நிபந்தனை ஜாமின் வழங்கியது நீதிமன்றம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைவு!

பேய் அரசாண்டால் பிணந்தின்னும் சாஸ்திரங்கள்: புரட்சி தான் ஒரே வழி! - ஆதவ் அர்ஜுனா நீக்கிய பதிவு!

சரஸ்வதி பூஜை: பூக்கள் விலை கணிசமாக உயா்வு

இன்றைய நிகழ்ச்சி

சொல்லப் போனால்... எல்லாருக்கும் இல்லையா, தீபாவளிப் பரிசு?

SCROLL FOR NEXT