கோப்புப்படம் 
தமிழ்நாடு

100 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லை!

சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 100 ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் திங்கள்கிழமை(ஆக.29) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆக விற்பனையாயின.

DIN

சென்னை: சென்னையில் பெட்ரோல், டீசல் விலையில் 100 ஆவது நாளாக மாற்றம் இல்லாமல் திங்கள்கிழமை(ஆக.29) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆக விற்பனையாயின.

பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், சர்வதேச சந்தை நிலவரத்திற்கு ஏற்ப, உள்நாட்டில் பெட்ரோல், டீசல் விலையை, நாள்தோறும் நிர்ணயம் செய்து வருகின்றன. 

கடந்த மே 21 ஆம் தேதி மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்,  பெட்ரோல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ. 9 ஆகவும், டீசல் மீதான கலால் வரி லிட்டருக்கு ரூ.7.50 ஆகவும் குறைக்கப்படும் என அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து சென்னையில் (மே. 22) பெட்ரோல் ரூ.8.22 காசு குறைந்து ஒரு லிட்டர் பெட்ரோல் ரூ.102.63 ஆகவும், டீசல் லிட்டருக்கு ரூ.6.70 காசு குறைந்து ரூ.94.24 ஆகவும் விற்பனை செய்யப்பட்டது. 

இந்நிலையில், 100 ஆவது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றமில்லாமல் விற்பனையாகி வருகின்றது. 

திங்கள்கிழமை நிலவரப்படி (ஆக.29) பெட்ரோல் லிட்டருக்கு ரூ.102.63 ஆகவும், டீசல் ரூ.94.24 ஆகவும் விற்பனையாகி வருகின்றது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அரியலூரில் அரசு ஊழியா்கள் சாலை மறியல்

ஜெயங்கொண்டம், தா.பழூா், பகுதிகளில் நாளை மின்தடை

வாரியங்காவலில் நாளை மருத்துவச் சேவை முகாம்

சின்ன வெங்காயத்தில் திருகல் நோயை கட்டுப்படுத்த ஆலோசனை

இரண்டு மாற்றுத்திறனாளி சிறுமிகளுக்கு முன்னுரிமை குடும்ப அட்டைகள் வழங்கல்

SCROLL FOR NEXT