திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் நாகப்பாம்பு: பொதுமக்கள் அலறியடித்து ஓட்டம்
திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் வார்டு பகுதிக்கு எதிரே பாம்பைப் பார்த்த பொதுமக்கள் அலறடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்ட திருப்பத்தூர் தலைமை அரசு மருத்துவமனையில் டயாலிசிஸ் வார்டு பகுதிக்கு எதிரே பாம்பைப் பார்த்த பொதுமக்கள் அலறடித்து ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது.
அரசு மருத்துவமனைக்கு தன்னுடைய உறவினரை சிகிச்சைக்காக அழைத்துக்கொண்டு வந்த சரன் என்பவர் அந்த வழியாகச் செல்லும் போது திடீரென நச்சுத்தன்மை மிகுந்த நாகப்பாம்பு நடமாட்டத்தைக் கண்டு அதிர்ச்சி அடைந்து உடனடியாக தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
தகவல் அறிந்து விரைந்து வந்த நிலையில் அலுவலர் அசோகன் தலைமையில் பாம்பு இருக்கும் இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் லாவகரமாக நாகப் பாம்பைப் பிடித்து காட்டுப்பகுதிக்கு எடுத்துச் சென்றனர்.
அரசு மருத்துவமனையில் பாம்பைக் கண்ட பொதுமக்கள் சிறிது நேரம் அச்சத்தில் உறைந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.