தமிழ்நாடு

வைகை அணை நீர் திறப்பு: 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

DIN

வைகை அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்துவிடப்பட்டுள்ளதையடுத்து தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மதுரை, தேனி உள்ளிட்ட மாவட்டங்களில் பெய்து வரும் தொடா் கனமழை காரணமாக நீா்பிடிப்புப் பகுதிகளில் தண்ணீா் வரத்து அதிகரித்துள்ளது. இதனால் அணையில் இருந்து உபரிநீா் திறக்கப்பட்டுள்ளதால் வைகை ஆற்றில் தண்ணீா் கரைபுரண்டு ஓடுகிறது.

மேலும் மதுரை, ராமநாதபுரம் மற்றும் சிவகங்கை மாவட்டங்களில் உள்ள வைகை பூா்வீக பாசனப் பகுதிகளுக்கு தற்போது வைகை அணையில் இருந்து 7 மதகுகள் வழியாக சனிக்கிழமை முதல் தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. 

வைகை அணை அதன் முழுக் கொள்ளளவான 70 அடியை எட்டியதால் அணையிலிருந்து வினாடிக்கு 4,006 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. 

இதையடுத்து ஆற்றின் கரையோரம் உள்ள தேனி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம் ஆகிய 5 மாவட்ட மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தாழ்வான பகுதிகளில் உள்ள மக்கள் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இரட்டை இலக்க வளர்ச்சி விகிதத்துடன் தமிழ்நாடு முதலிடம் - முதல்வர் பெருமிதம்

திருப்பூர் அருகே எஸ்.ஐ. வெட்டிக் கொலை: ரூ.1 கோடி நிதியுதவி

தமிழக எம்.பி. சுதாவின் தங்கச் செயின் மீட்பு! திருடன் கைது!

உத்தரகண்டில் தொடரும் கனமழை: நிலச்சரிவில் மாயமானவர்களை தேடும் ராணுவம்!

பேரிடர் அபாயங்களை எதிர்கொள்ளத் தயாராக இருக்க வேண்டும்: சு.வெங்கடேசன் எம்.பி

SCROLL FOR NEXT