தமிழ்நாடு

ஏற்காட்டில் கடும் பனிப்பொழிவு: மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்பு!

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் குளுமையைக் கொண்டாடுவதற்காக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம் 

DIN

ஏழைகளின் ஊட்டி என்று அழைக்கப்படும் ஏற்காட்டில் குளுமையைக் கொண்டாடுவதற்காக வெளிமாநிலம், வெளி மாவட்டங்களில் இருந்து ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வருகை புரிவது வழக்கம் 

இந்த நிலையில் ஏற்காட்டில் கடந்த சில தினங்களாகவே அதிகளவில் பனிப்பொழிவு காணப்படுவதால் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தனர். 

இன்று காலை முதலே ஏற்காடு மற்றும் நாகலூர் மஞ்சகுட்டை படகு இல்லம் சேர்வராயன் கோயில் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கடும் பனிமூட்டம் நிலவு வருகிறது.  

மேலும், அதிகப்படியான குளிரும் இருப்பதால் ஏற்காட்டில் உள்ள மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது நண்பகல் 2 மணிக்கு கூட கடுமையான குளிர் நிலவுவதால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனர். இதனால் எந்த ஒரு பணிக்கும் செல்ல முடியாமல் அவர்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.

அதிகளவில் பனிப்பொழிவு குளிர் உள்ளதால் அண்ணா பூங்கா, மான் பூங்கா தாவரவியல் பூங்கா உள்ளிட்ட பல்வேறு பகுதிகள் சுற்றுலாப் பயணிகள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. 

மேலும் ஒரு சில வாகனங்கள் மட்டுமே ஏற்காட்டிற்கு வருகிறது. அவ்வாறு வரும் வாகனங்களும் முகப்பு விளக்கு எரியவிட்ட படி பயணித்து வருகின்றனர் இந்த பனிமூட்டம் குளிரால் ஏற்காடு மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது  குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கனமழை! வியத்நாமில் வீசிய புயலால் 3 பேர் பலி!

மாசுபாட்டைக் குறைக்க பள்ளிப் பேருந்துகள் மின்சாரத்தில் இயங்க வேண்டும்: ரேகா குப்தா

சிஆர்பிஎஃப், ராணுவ, மத்திய அரசு அதிகாரிகளுடன் தொடர்பிலிருந்த பாகிஸ்தான் உளவாளி: தகவல்கள்

இயக்குநராகும் முழுத் தகுதியும் மணிகண்டனுக்கு உண்டு: சிவகார்த்திகேயன்

காங்கிரஸ்காரனாகதான் இறப்பேன்! ஆர்எஸ்எஸ் பாடலை பாடியதற்கு மன்னிப்புக் கோரினார் சிவக்குமார்!

SCROLL FOR NEXT