தமிழ்நாடு

இந்திய கடற்படை நாள்: பிரதமர் மோடி வாழ்த்து

DIN

இந்திய கடற்படை நாளையொட்டி கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டிவிட்டர் பதிவில் வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், “கடற்படை வீரர்களுக்கும், அவர்களது குடும்பத்தினர் அனைவருக்கும் கடற்படை தின நல்வாழ்த்துகள். நமது வளமான கடல்சார் வரலாற்றைக் கண்டு இந்தியர்களாகிய நாம் அனைவரும் பெருமை கொள்கிறோம்.

நமது இந்திய கடற்படை, நம் தேசத்தை உறுதியோடு பாதுகாப்பதோடு, சவாலான தருணங்களில் தனது மனிதாபிமான உணர்வினால் பெருமளவு உயர்ந்துள்ளது.” இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார். 4 .12.1971-இல் பாகிஸ்தானுக்கு எதிரான போரில் கராச்சி துறைமுகத்தில் புகுந்த இந்திய கடற்படை கடும் தாக்குதல்களை நடத்தி பெரும் வெற்றியைக் குறிப்பிடும் வகையில் ஆண்டுதோறும் டிச.4-இல் கடற்படை நாள் கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்தாண்டு கடற்படை நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி தமிழ்நாடு-புதுச்சேரி மண்டல கடற்படை அலுவலகம் சாா்பில் சென்னையில் பல்வேறு சிறப்பு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அரசுப் பள்ளிகளில் சுவா் ஓவியங்கள்: கல்வித்துறை உத்தரவு

தோ்வில் சிறப்பிடம் பெற்ற மாணவா்களுக்கு பள்ளியில் சிவப்புக் கம்பள வரவேற்பு

சென்னையில் 8 மணிநேரத்துக்கு மேல் மெட்ரோ ரயில் சேவை பாதிப்பு

வேலூரில் வெங்கடாஜலபதி கோயில் ரூ. 5 கோடியில் விரிவாக்கம்

நியாய விலைக்கடை மீது விழுந்த மரத்தை அகற்றக் கோரிக்கை

SCROLL FOR NEXT