ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கா பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
தமிழக முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாள் கடைப்பிடிக்கப்படுகிறது. இதையொட்டி மாவட்டம் முழுவதும் ஆங்காங்கே கட்சி நிா்வாகிகள் ஜெயலலிதாவின் உருவச் சிலை மற்றும் அவரது உருவப்படங்களுக்கு மாலை அணிவித்தும், மலா் தூவியும் அஞ்சலி செலுத்த வருகின்றனர்.
இதையும் படிக்க- மோடி எதிர்ப்பு இப்போது இல்லை: டி.டி.வி.தினகரன்
அந்த வகையில் சென்னை மெரினாவில் உள்ள ஜெயலலிதா நினைவிடத்தில் அதிமுக இடைக்கா பொதுச்செயலர் பழனிசாமி தலைமையில் அதிமுகவினர் மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில் அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
தொடர்ந்து, நாடாளுமன்ற தேர்தலில் மெகா கூட்டணி அமைத்து நாற்பது தொகுதிகளிலும் வெற்றி பெற சூளுரைப்போம் என அதிமுகவினர் உறுதிமொழியும் எடுத்துக்கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.