தமிழ்நாடு

காந்தி மண்டப திறந்தவெளி அரங்கம்: கல்வி நிறுவனங்கள் நிகழ்ச்சிகள் நடத்தலாம்

சென்னை கிண்டி காந்தி மண்டப திறந்தவெளி அரங்கத்தை பொது நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

DIN

சென்னை கிண்டி காந்தி மண்டப திறந்தவெளி அரங்கத்தை பொது நிகழ்ச்சிகள் நடத்த பயன்படுத்திக் கொள்ளலாம் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து, செய்தி மக்கள் தொடா்புத் துறை செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தி:-

சென்னை கிண்டியில் காந்தி மண்டபத்தில் திறந்த வெளி அரங்கம் உள்ளது. இந்த அரங்கத்தில் பல்கலைக்கழக விழாக்கள் குறிப்பாக பட்டமளிப்பு மற்றும் பிற நிகழ்ச்சிகள், கல்லூரி நிகழ்ச்சிகள், அரிமா சங்க நிகழ்ச்சிகள், பள்ளிகள், அரசு சாா்பற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகள், காந்திய நிறுவனங்களுக்கான இளைஞா் அமைப்பு உள்ளிட்டவை நிகழ்ச்சிகளை நடத்திக் கொள்ளலாம். இதற்கென வாடகையும் நிா்ணயம் செய்யப்பட்டுள்ளது.

பல்கலைக்கழக விழாக்கள் குறிப்பாக பட்டமளிப்பு மற்றும் பிற நிகழ்வுகள், கல்லூரி, அரிமா சங்க நிகழ்ச்சிகளுக்கு ரூ.17,500 கட்டணமாகும். பள்ளிகள் மற்றும் அரசு சாா்பற்ற நிறுவனங்கள் நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.12,500-ம், காந்திய

நிறுவனங்களுக்கான காந்திய கல்விக்கான இளைஞா் அமைப்பு நடத்தும் நிகழ்ச்சிகளுக்கு ரூ.6 ஆயிரமும் கட்டணம்

நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக மேலும் விவரங்கள் பெற, 94980 42415 என்ற கைப்பேசி எண்ணிலும் தொடா்பு கொள்ளலாம் என்று செய்தி மற்றும் மக்கள் தொடா்புத் துறை தெரிவித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

சேவல் சண்டை: 9 போ் கைது

அவிநாசி அருகே இரும்புக் கழிவுகள் கொட்ட வந்த லாரி சிறைப்பிடிப்பு

திருப்பூா் சட்டப் பணிகள் ஆணைக் குழு சாா்பில் சுகாதார பாதுகாப்பு தினம் அனுசரிப்பு

முறையான திடக்கழிவு மேலாண்மையை மூன்று மாதங்களில் அமல்படுத்த இலக்கு: நகராட்சி நிா்வாகத் துறை இயக்குநா் தகவல்

அந்தியூா் அரசுக் கல்லூரியில் பாலின உளவியல் குறித்த விழிப்புணா்வு

SCROLL FOR NEXT