முகப்பு
தமிழ்நாடு

மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனை: ஒருவர் கைது!

மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:02 AM
மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை கைது செய்த வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர்.
பகிர்:


மணப்பாறையில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட ஒருவரை வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தருமபுரி மாவட்டம் வனச்சரகத்திற்குள் கடந்த 2021 ஆம் ஆண்டில் யானை தந்தங்கள் விற்பனையில் ஈடுபட்ட நபர்களை தருமபுரி வனச்சரகத்தினர், வன பாதுக்காப்புப் படையினர் கைது செய்து வரும் நிலையில், தற்போது அந்த வழக்கில் தொடர்புடைய 17 ஆவது குற்றவாளியாக மணப்பாறை அடுத்த சுக்காம்பட்டியை சேர்ந்த வெங்கட் ராமராஜ் மகன் கந்தசாமி(48) என்பவரை திருச்சி வன காவல்நிலைய உதவியுடன் தருமபுரி வனச்சரகத்தினர் மற்றும் வன பாதுக்காப்புப் படையினர் தற்போது கைது செய்துள்ளனர். 

இந்த வழக்கில் கந்தசாமி இடைதரகராக செயல்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், இவ்வழக்கில் தொடர்புடைய 3 பேர் தேடப்பட்டு வருவதாகவும் வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.