தமிழ்நாடு

காலை 10 மணிவரை எந்தெந்த மாவட்டங்களில் மழை பெய்யும்?

அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

DIN

அடுத்த 3 மணிநேரத்திற்கு 19 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வங்கக்கடலில் உருவாகியுள்ள மாண்டஸ் புயல் சென்னைக்கு 700 கீ.மீ. தொலைவில் நகர்ந்து வந்து கொண்டிருக்கிறது. இதன்காரணமாக, வடதமிழகம், புதுச்சேரி, தென் ஆந்திர மாவட்டங்களுக்கு அடுத்த 2 நாள்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில், காலை 10 மணிவரை சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கடலூர், பெரம்பலூர், அரியலூர், நாகப்பட்டினம், திருவாரூர், திருச்சி, புதுக்கோட்டை, தஞ்சாவூர், சிவகங்கை, தூத்துக்குடி, திருநெல்வேலி, கோவை மற்றும் நீலகிரி ஆகிய 19 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

வங்கக்கடலில் மையம் கொண்டுள்ள மாண்டஸ் புயலானது நாளை இரவு புதுச்சேரி - ஸ்ரீஹரிகோட்டாவுக்கு இடையே கரையை கடக்கும் எனவும், அச்சமயத்தில் 80 கீ.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தங்கம் விலை ரூ. 87 ஆயிரத்தைக் கடந்தது! 3 நாள்களில் ரூ. 2,000 உயர்வு!

முதியவா்களுக்கு எதிரான குற்றங்கள்: தமிழகம் 4-ஆவது இடம்!

பாடகர் ஸுபீன் கர்கின் மேலாளர், நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் கைது!

வர்த்தக சிலிண்டர் விலை உயர்வு!

பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! 27 பேர் பலி!

SCROLL FOR NEXT