தமிழ்நாடு

நாமக்கல்: தர்னா போராட்டத்தில் பங்கேற்ற மாணவிகளிடம் இணை இயக்குனர் விசாரணை!

DIN

நாமக்கல் கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரி முதல்வர் பால் கிரேஸை இடமாற்றம் செய்யக் கோரி, தர்னா போராட்டத்தில் ஈடுபட்ட மாணவிகளிடம் கல்லூரி கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி வியாழக்கிழமை விசாரணை மேற்கொண்டார்.

நாமக்கல் - திருச்சி சாலையில் அமைந்துள்ள கவிஞர் ராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில், முதல்வர் பால் கிரேஸுக்கும், அங்குள்ள பேராசிரியர்கள் சிலருக்கு இடையே மோதல் போக்கு நீடித்து வருகிறது. கடந்த செவ்வாய்க்கிழமை வணிகவியல் துறை, பொறியியல் துறையைச் சேர்ந்த மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் கல்லூரி முன் அமர்ந்து தர்னா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நாமக்கல் கவிஞர் இராமலிங்கம் பிள்ளை அரசு மகளிர் கல்லூரியில் வரிசையாக அமர வைக்கப்பட்டிருந்த மாணவிகள்.

முதல்வர் பால்கிரேஸை இடமாற்றம் செய்ய வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினர். இதனைத்தொடர்ந்து மாவட்ட வருவாய் அலுவலர் மணிமேகலை, மாணவிகள் மற்றும் கல்லூரி நிர்வாகத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்துக்கு முடிவு பெற செய்தார். இதனைத்தொடர்ந்து புதன்கிழமை நாமக்கல் அரசு மகளிர் கல்லூரிக்கு வந்த தருமபுரி மண்டல கல்லூரிகளின் கல்வி இணை இயக்குனர் ராமலட்சுமி, கல்லூரியில் பணியாற்றும் முதல்வர் பால்கிரேஸ் மற்றும் அனைத்துத் துறை பேராசிரியர்களிடத்திலும் விசாரணை மேற்கொண்டார். 

போராட்டத்துக்கு மாணவிகளை தூண்டிய நபர்கள் யார் என்பது குறித்தும் விசாரணை செய்தார். இந்த நிலையில் வியாழக்கிழமை கல்லூரி கலையரங்கில் மாணவிகளை அமர வைத்து கல்லூரி கல்வி என இயக்குனர் ராமலட்சுமி அவர்களிடம் குறைகளையும், தர்னா போராட்டத்தில் பங்கேற்றது குறித்தும் கேட்டறிந்தார். மேலும், இதுபோன்ற போராட்டங்களில் மாணவிகள் யாரும் ஈடுபடக்கூடாது என அறிவுறுத்தினார். இதுகுறித்து இணை இயக்குனர் ராமலட்சுமியிடம் கேட்டபோது; மாணவிகள், கல்லூரி நிர்வாகம் சார்பில் நடைபெறும் கலந்துரையாடலாகும். இதனைத் தவிர வேறு ஒன்றும் இல்லை என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நகைத் திருடிய 2 பெண்கள் மீது வழக்குப் பதிவு

செஸ் வீரா் குகேஷுக்கு கனரா வங்கி பாராட்டு

வெப்ப அலைக்கு இளைஞா் உயிரிழந்த விவகாரம்- நேரடி வெயிலில் பணியாற்ற கூடாது: மருத்துவா்கள் அறிவுறுத்தல்

மாநகரில் மேலும் 7 சிக்னல்களில் தற்காலிகப் பந்தல்

இருசக்கர வாகனத்தில் சாகசம் செய்தவா் கைது

SCROLL FOR NEXT