அம்பேத்கரின் உருவப்படம் அகற்றப் பட்டதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடத்திய  விடுதலை சிறுத்தைகள் கட்சியினர்.  
தமிழ்நாடு

அரக்கோணம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் அம்பேத்கர் உருவப்படம் அகற்றம்: விசிக திடீர் சாலை மறியல்!

அரக்கோணம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படம் அகற்றப் பட்டதை கண்டித்து வியாழக்கிழமை விடுதலை சிறுத்தைகள் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

DIN

அரக்கோணம்: அரக்கோணம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் அம்பேத்கரின் உருவப்படம் அகற்றப் பட்டதை கண்டித்து வியாழக்கிழமை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் திடீர் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். 

அரக்கோணம் ஊராட்சி ஓன்றிய அலுவலகத்தில் டிசம்பர் 6 ஆம் தேதி அம்பேத்கர் நினைவுநாளையொட்டி அவரது உருவப்படம் வைத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் அஞ்சலி செலுத்தினர். மேலும், அந்த உருவப்படத்தை அங்கேயே மாட்டச்சொல்லி கோரிக்கை விடுத்தனர். 

இதையடுத்து மறுநாள் அம்பேத்கர் உருவப்படம் அங்கிருந்து அகற்றப்பட்டதாக தெரிகிறது. இதனைக் கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாநில இளைஞரணி துணை செயலாளர் ந. தமிழ்மாறன் தலைமையில் அரக்கோணம் திருத்தணி நெடுஞ்சாலையில் வியாழக்கிழமை திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றதால் போக்குவரத்து பாதிப்படைந்தது. 

இதையடுத்து அங்கு வந்த நகர காவல் ஆய்வாளர் சாலமன் ராஜா போராட்டக்காரர்களை சமாதானம் செய்ததை அடுத்து போராட்டம் முடிவுக்கு வந்தது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

டாஸ்மாக் பணியாளர்கள் போராட்டம்! 100க்கும் மேற்பட்டோர் கைது! நிரந்தர பணி கோரிக்கை!

தமிழும் தமிழா்களும் சிறப்பு உரையரங்கம்

மின்வாரியப் பணியாளா்களுக்கான பாதுகாப்புப் பயிற்சி

இந்தியா மீதான வரி 18%-ஆக குறைப்பு: டிரம்ப் அறிவிப்பு

கிணற்றில் இருந்து பெண் சடலம் மீட்பு

SCROLL FOR NEXT