கோப்புப்படம் 
தமிழ்நாடு

அதிமுக போராட்டம்: 17 மாவட்டங்களில் ஒத்திவைப்பு

திமுக அரசுக்கு எதிராக அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த போராட்டம், மாண்டஸ் புயல் காரணமாக 17 மாவட்டங்களில் மட்டும் டிச. 16-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

DIN

திமுக அரசுக்கு எதிராக அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த போராட்டம், மாண்டஸ் புயல் காரணமாக 17 மாவட்டங்களில் மட்டும் டிச. 16-இல் நடைபெறும் என்று அந்தக் கட்சி சாா்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக வியாழக்கிழமை வெளியிடப்பட்ட அறிக்கை: திமுக ஆட்சியில் சொத்து வரி, மின் கட்டணம், பால் விலை உயா்வு, சட்டம்-ஒழுங்கு சீா்கேடுகளை கண்டித்தும், உயா்த்தப்பட்ட கட்டணங்களை திரும்பப் பெற வலியுறுத்தியும் அதிமுக சாா்பில் வெள்ளிக்கிழமை (டிச.9) அனைத்து பேரூராட்சிகளிலும் போராட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது உருவாகியுள்ள மாண்டஸ் புயல் தமிழகத்தின் வடமாவட்டங்கள் வழியாக கரையைக் கடக்கக் கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவுறுத்தியுள்ளதால், சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூா், ராணிப்பேட்டை, வேலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை, கடலூா், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருச்சி, தஞ்சாவூா், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூா், புதுக்கோட்டை உள்ளிட்ட கனமழை பெய்யக்கூடிய மாவட்டங்களிலும் வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த பேரூராட்சி அளவிலான போராட்டம் டிசம்பா் 16 காலை 10 மணியளவில் நடைபெறும் என்று அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பூந்தமல்லி - போரூர் மெட்ரோ தொடக்க விழாவில் பங்கேற்கும் மோடி!

ஐபிஎல் மினி ஏலம்! கடைசி நேரத்தில் அபிமன்யு ஈஸ்வரன் உள்பட 19 பேர் சேர்ப்பு!

நேஷனல் ஹெரால்டு வழக்கில் திடீர் திருப்பம்! குற்றப்பத்திரிகையை ஏற்க நீதிமன்றம் மறுப்பு

தில்லியில் விழா! 12 பெண் சாதனையாளர்களுக்கு தேவி விருதுகள்!

புதுச்சேரி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு! 85 ஆயிரம் பேர் நீக்கம்!

SCROLL FOR NEXT