கோப்புப்படம் 
தமிழ்நாடு

'ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல் இயங்கும்'

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

DIN

தமிழகத்தில் ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல இயங்கும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. 

வங்கக் கடலில் மையம் கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமானது 'மாண்டஸ்' எனும் புயலாக வலுவடைந்து தற்போது  சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. மாண்டஸ் புயல் இன்று (டிச.9) நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதையொட்டி புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(டிச.9) இரவு அரசுப் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்துத் துறை கூறியுள்ளது. 

இதையடுத்து ஆம்னி பேருந்துகள் இயங்குமா என்று கேள்வி எழுந்த நிலையில், ஆம்னி பேருந்துகள் இயங்குவதை நிறுத்தி வைக்க வேண்டும் என்று இதுவரை அரசிடமிருந்து எந்த தகவலும் வரவில்லை என்றும் எனவே, ஆம்னி பேருந்துகள் இன்று இரவு வழக்கம்போல இயங்கும் என்றும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத் தலைவர் அன்பழகன் தகவல் தெரிவித்துள்ளார். 

இதனிடையே அரசுப் பேருந்துகள் இயக்கம் குறித்து விளக்கம் தெரிவித்துள்ள போக்குவரத்துத் துறை, புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மட்டும் குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை பகுதிகளில் பேருந்து சேவை இருக்காது என்று கூறியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நிறுத்துங்க... ஐஸ்வர்யா மேனன்!

தாம்பரம் புதிய அரசு மருத்துவமனை: ஆக. 9-ல் முதல்வர் திறந்து வைக்கிறார்!

ஆதாரங்கள் இல்லை! சத்யேந்தர் ஜெயினுக்கு எதிரான ஊழல் வழக்கு முடித்துவைப்பு!

அமெரிக்காவுக்குச் செல்ல இனி ரூ. 13 லட்சம் டெபாசிட்? விரைவில் அறிவிப்பு வருகிறது!!

மத்திய அரசுக்கு எதிராக கேள்வி எழுப்புவதுதான் ராகுலின் வேலை: பிரியங்கா காந்தி

SCROLL FOR NEXT