தமிழ்நாடு

மெட்ரோ ரயில்கள் வழக்கம்போல் இயங்கும்: சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம்

DIN

மாண்டஸ் புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெவித்துள்ளது. 

வங்கக் கடலில் உருவாகியுள்ள 'மாண்டஸ்' புயல் தற்போது சென்னையை நோக்கி நகர்ந்து வருகிறது. இந்த புயல் இன்று (டிச.9) நள்ளிரவு மாமல்லபுரம் அருகே கரையை கடக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. புயல் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலூர், விழுப்புரம் ஆகிய 6 மாவட்டங்களில் இன்று(டிச.9) இரவு அரசுப் பேருந்துகள் இயங்காது என்று போக்குவரத்துத் துறை கூறியிருந்தது.

இந்நிலையில் இதுகுறித்து விளக்கம் தெரிவித்துள்ள போக்குவரத்துத் துறை அதிகாரிகள், தமிழகத்தில் புயல் கரையைக் கடக்கும் நேரத்தில் மட்டும், குறிப்பாக சென்னை கிழக்கு கடற்கரைச் சாலை உள்ளிட்ட கடலோரப் பகுதிகளில் மட்டும் பேருந்து சேவை நிறுத்தப்படும் என்று கூறியுள்ளனர். மேலும் புயல் காரணமாக சென்னையில் இருந்து செல்லும், சென்னைக்கு வரும் 13 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. 

காற்றின் வேகத்தை பொறுத்து விமான போக்குவரத்து இருக்கும் எனத் தகவல் வெளியாகியுள்ளது. இதனிடையே மாண்டஸ் புயல் காரணமாக மெட்ரோ ரயில் சேவையில் எந்த மாற்றமும் இல்லை என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் தெவித்துள்ளது. மெட்ரோ ரயில் அதிகாலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை வழக்கம்போல் இயங்கும் என்றும் அதில் குறிப்பிட்டுள்ளளனர். 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாஷிங்டன் பல்கலை. வளாகத்தில் பாலஸ்தீன ஆதரவு போராட்டம்

‘வாக்குப்பதிவு இயந்திரங்கள் அறை பகுதியில் டிரோன்கள் பறக்கத் தடை’

ஆதிரெத்தினேஸ்வரா் கோயில் வைகாசித் திருவிழா மே 13-இல் தொடக்கம்

மேல்நிலைக் குடிநீா் தொட்டி கட்ட எதிா்ப்பு -ஒருவா் தீக்குளிக்க முயற்சி

நாசரேத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு விழா

SCROLL FOR NEXT