தமிழ்நாடு

பாபா ரீ-ரிலீஸ்: மதுரையில் ரஜினி ரசிகர்கள் கொண்டாட்டம்

மதுரையில் பாபா திரைப்பட ரீரிலீஸை அடுத்து, ரஜினி ரசிகர்கள் ஆட்டத்துடன்  பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

DIN

மதுரையில் பாபா திரைப்பட ரீரிலீஸை அடுத்து, ரஜினி ரசிகர்கள் ஆட்டத்துடன்  பட்டாசு வெடித்து கொண்டாடினர். 

நடிகர் ரஜினிகாந்த் கடந்த 2002 ஆம் ஆண்டு எழுதி, தயாரித்து சுரேஸ் கிருஷ்ணா இயக்கத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான 'பாபா' திரைப்படம் அப்போதைய காலத்தில் பெரிய அளவில் வெற்றி பெறவில்லை.

படத்தின் விநியோகஸ்தர்கள் நஷ்டப் பணத்தைக் கேட்டு ரஜினியிடம் போராடியதெல்லாம் ஒரு கதையாக தற்போது வரை பேசப்பட்டு வருகிறது. தற்போது பாபா படம்  டிஜிட்டலில் புதுப்பிக்கப்பட்டு, ரஜினி டப்பிங் பேசி இன்று ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது.

மதுரை அமிர்தம் தியேட்டரில் ரஜினி ரசிகர் மன்றம் சார்பில் அதிகாலை 4.30 மணிக்கு ரசிகர் காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மேள தாளத்துடன் ரஜினி ரசிகர்கள் நூற்றுக்கும் மேற்பட்டோர் திரண்டு பட்டாசு வெடித்து பாபா படத்தை வரவேற்றனர். மேலும் நடனமாடி தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

20 ஆண்டுகளுக்குப் பின்பாக மீண்டும் பாபா படம் திரையரங்கில் வெளியாகி இருப்பது ரஜினி ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நாளை மறுநாள்(டிச. 12) நடிகர் ரஜினிகாந்த் தனது 73-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

மகளிா் தொழில்நுட்பக் கல்லூரியில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி

செண்டூரில் ஆடிப்பெருக்கு விழா: மயிலம் முருகனுக்கு தீா்த்தவாரி

கூட்டுறவும் நாட்டுயா்வும்!

மின்னணு பொருள்கள் விற்பனையகத்தில் தீ விபத்து

கோயில்களில் சிறப்பு வழிபாடு

SCROLL FOR NEXT