அண்ணாமலை 
தமிழ்நாடு

அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும்: கே.அண்ணாமலை

அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

DIN

அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும் என்று பாஜக மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை தெரிவித்துள்ளார். 

திருச்சியில் நடைபெற்ற பாஜக இளைஞர் அணி மாநில செயற்குழு கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கட்சியின் மாநிலத் தலைவர் கே.அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர். கூட்டத்துக்குப் பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அமைச்சர்களின் அடுத்த ஊழல் பட்டியல் விரைவில் வெளியிடப்படும். 

பொதுமக்கள் பேசும் அளவுக்கு ஊழல் அதிகரித்து வருகிறது. ஆளுநர் ஆன்லைன் சூதாட்ட உரிமையாளர்களை சந்தித்தது குறித்து எங்களுக்கு தெரியாது. ஆன்லைன் சூதாட்டத்தை முறைப்படுத்த வேண்டும், தடை செய்ய வேண்டும். ஆன்லைன் சூதாட்டத்திற்கு தீர்வு வேகமாக கிடைக்க வேண்டும் என்பதே எங்களது எதிர்பார்ப்பு. 

அரசியலில் அதர்ம வழியில் சென்றால் கடைசியில் பூஜ்யம்தான். சிறுபான்மையின மாணவருக்கான கல்வி உதவித்தொகை வேறொரு திட்டத்தின் பெரியரில் வழங்கப்படுகிறது. மழை, வெள்ள பாதிப்பு விவகாரத்தில் பாஜக அரசியல் செய்யாது. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

தூத்துக்குடி மாவட்டத்தில் மக்காச்சோளம் செயல் விளக்கத் திடல் அமைக்க மானியம்

ராதாபுரம் அருகே பைக்கில் சென்ற இளைஞா் மா்ம மரணம்

ரூ.58 லட்சத்தில் பள்ளிக் கட்டடங்கள், பயணிகள் நிழல்குடை திறப்பு

ஆரணி ஸ்ரீமுத்துமாரியம்மன் கோயிலில் 301 திருவிளக்கு பூஜை

வடக்கன்குளம் பரிசுத்த பரலோக மாதா ஆலயத் திருவிழா கொடியேற்றம்

SCROLL FOR NEXT