தமிழ்நாடு

வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று மூடல்!

DIN

புயலையொட்டி மரங்கள் விழுந்துள்ளதால் பராமரிப்புப் பணி காரணமாக வண்டலூர், கிண்டி பூங்காக்கள் இன்று ஒருநாள் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

வங்கக்கடலில் உருவான மாண்டஸ் புயல் இன்று(சனிக்கிழமை) அதிகாலை 3 மணியளவில் மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது.

புயலையொட்டி நேற்று முதலே பல்வேறு மாவட்டங்களில் பலத்த காற்றுடன் கனமழை பெய்தது. சூறைக்காற்றினால் பல இடங்களில் மரங்கள் விழுந்துள்ளன. 

இந்நிலையில், மரங்கள் விழுந்ததாலும் பராமரிப்புப் பணி காரணமாகவும் வண்டலூர் உயிரியல் பூங்கா மூடப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

அதேபோல கிண்டி சிறுவர் பூங்காவும் இன்று ஒருநாள் பராமரிப்புப் பணி காரணமாக மூடப்படுகிறது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புரோமோவில் கெட்ட வார்த்தை.. சர்ச்சையில் சந்தானம்!

சவுக்கு சங்கர் மீது பாய்ந்தது குண்டர் சட்டம்!

செலவுகளை அதிகரித்துள்ளதா யுபிஐ? ஆய்வு சொல்வது இதுதான்!

வங்கதேசத்துக்கு எதிராக ஜிம்பாப்வே ஆறுதல் வெற்றி!

சென்னையிலிருந்து வேளாங்கண்ணி, கொச்சுவேலிக்கு சிறப்பு ரயில்கள் - முன்பதிவு தொடக்கம்

SCROLL FOR NEXT