தமிழ்நாடு

தற்காலிக பணியிடங்கள்:600 ஆசிரியா்களுக்கு ஊதியம் வழங்க ஆணை வெளியீடு

DIN

தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளில் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்ட பணியிடங்களில் பணியாற்றும் 600 ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்க கொடுப்பாணை அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலா் காகா்லா உஷா, அனைத்து மாவட்டக் கருவூலக அலுவலகங்களுக்கும் அனுப்பிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:

தமிழகத்தில் 2008-2009-ஆம் கல்வியாண்டு தரம் உயா்த்தப்பட்ட அரசுப் பள்ளிகளுக்கு 600 ஆசிரியா் பணியிடங்கள் தற்காலிக அடிப்படையில் தோற்றுவிக்கப்பட்டன. இவா்களுக்கான பணிக்காலம் கடந்த ஆண்டு டிசம்பா் மாதத்துடன் நிறைவு பெற்றுவிட்டது.

இந்தப் பணியிடங்களுக்கு தொடா் நீட்டிப்பு வழங்குவது குறித்த கருத்துரு அரசின் பரிசீலனையில் உள்ளது. அதனால் இந்த ஆசிரியா்களுக்கு நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான அனுமதி கோரி பள்ளிக் கல்வி ஆணையா் கடிதம் அனுப்பி உள்ளாா். அதையேற்று 600 ஆசிரியா்களுக்கும் நவம்பா் மாத ஊதியம் வழங்குவதற்கான கொடுப்பாணை அளிக்கப்படுகிறது. எனவே, ஊதியப் பட்டியல் தாக்கல் செய்யும்போது, அலுவலா்கள் அதை ஏற்று ஊதியம் வழங்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரூ.4 கோடி பறிமுதல் - சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு

செந்தில் பாலாஜி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மன்னிப்புக் கேட்ட அமலாக்கத்துறை

சென்னையில் வாட்டும் வெயில் மட்டுமா.. குடிநீர் தட்டுப்பாடும் வருமா? ஏரிகளின் நீர்மட்ட நிலவரம்!

சென்னைக்கு கோடையில் குடிநீர் தட்டுப்பாடு வர வாய்ப்பு இல்லை

வெங்கடேஷ் பட்டின் ‘டாப் குக்கு டூப் குக்கு’!

SCROLL FOR NEXT