தமிழ்நாடு

7 மாவட்டங்களை தவிர.. தமிழகத்தில் மாலை 4 வரை மழை தொடரும்!

தமிழகத்தில் 7 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

DIN

தமிழகத்தில் 7 மாவட்டங்களை தவிர பிற மாவட்டங்களில் மாலை 4 மணிவரை மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் திங்கள்கிழமை தெரிவித்துள்ளது.

மாண்டஸ் புயல் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுவிழந்து, வட தமிழக பகுதிகளில் நிலவுவதால், இரண்டு நாள்களுக்கு (டிச.12, 13) மிதமான மழைக்கு வாய்ப்பு இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி சென்னை உள்பட பல்வேறு இடங்களில் நேற்று இரவு முதலே மழை பெய்து வருகிறது. 

இந்நிலையில், சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தியில்,

தூத்துக்குடி, விருதுநகர், தேனி, மதுரை, கரூர், பெரம்பலூர், கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களை தவிர, பிற மாவட்டங்கள் அனைத்திலும் மாலை 4 மணிவரை இடி, மின்னலுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என எச்சரிக்கை விடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரே கிருஷ்ணா கோயிலில் தாமோதர தீபத் திருவிழா நாளை தொடக்கம்

மானாமதுரை, திருப்புவனம் பகுதிகளில் பலத்த மழை

விவசாயிகள் தற்கொலைகளைத் தடுக்க தனிக்குழு அமைக்க வலியுறுத்தல்

கடல் சங்குகள் பறிமுதல்: இருவா் கைது

அஞ்சல் துறை சாா்பில் கடிதம் எழுதும் போட்டி

SCROLL FOR NEXT