கோப்புப் படம். 
தமிழ்நாடு

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி: முதல்வர் ஸ்டாலின் 

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

DIN

புதுச்சேரியிலும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 

புதுச்சேரி திமுக அவைத்தலைவர் எஸ்.பி.சிவக்குமாரின் இல்லத் திருமண விழவில் முதல்வர் ஸ்டாலின் ஆற்றிய உரை, புதுச்சேரி மீது எனக்கு தனிப்பாசமே உண்டு. கருணாநிதி கொள்கை வரம் பெற்ற ஊர் புதுச்சேரி. புதுச்சேரிக்கும் திராவிட இயக்கத்துக்கும் நேரடி தொடர்பு உண்டு. தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. 

திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம். ஆளுநர் ஆட்டி படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திமுகவின் ஆட்சி நிச்சயம் மீண்டும் அமையும். தேர்தல் நேரத்தில் கூட்டணி பற்றி முடிவு செய்யப்படும். 

புதுச்சேரியில் மதவாத ஆட்சி அமைந்துவிடக் கூடாது என்பதில் நாம் கவனமாக இருக்க வேண்டும். புதுச்சேரியில் பொம்மை ஆட்சி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. புதுச்சேரியில் தற்போது நடக்கும ஆட்சி மக்களுக்காக நடைபெறவில்லை. இவ்வாறு அவர் குறிப்பிட்டார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நடிகர் ரோபோ சங்கர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதி!

மும்பையில் பிரபல பள்ளியில் 4 வயது குழந்தைக்கு பாலியல் வன்கொடுமை: பெண் ஊழியர் கைது

போதைப்பொருள் கடத்தல் நாடுகள் பட்டியலில் இந்தியா! டிரம்ப் அறிவிப்பு!

மேட்டூா் அணைக்கு நீா்வரத்து குறைந்தது!

புர்ஜ் கலிஃபாவில் மோடிக்கு பிறந்த நாள் வாழ்த்து!

SCROLL FOR NEXT