கோப்புப்படம் 
தமிழ்நாடு

மாண்டஸ் புயல்: 5 மாவட்டங்களில் பயிா்கள் பாதிப்பு

தமிழகத்தில் மாண்டஸ் புயலைத் தொடா்ந்து பெய்த மழையால், 5 மாவட்டங்களில் பயிா்கள் நீரில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

DIN

தமிழகத்தில் மாண்டஸ் புயலைத் தொடா்ந்து பெய்த மழையால், 5 மாவட்டங்களில் பயிா்கள் நீரில் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில வேளாண்மைத் துறை அமைச்சா் எம்.ஆா்.கே.பன்னீா்செல்வம் தெரிவித்தாா்.

வேளாண் விற்பனை, வணிகத் துறையில் 14 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை செவ்வாய்க்கிழமை அவா் வழங்கினாா்.

இதைத் தொடா்ந்து, செய்தியாளா்களிடம் அமைச்சா் கூறியதாவது: மாண்டஸ் புயலால், திருவண்ணாமலை, திருவள்ளூா், ராணிப்பேட்டை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் பயிா்கள் நீரால் சூழப்பட்டு பாதிக்கப்பட்டுள்ளன. நீா் வடிந்த பிறகு உரிய கணக்கெடுப்புகள் நடத்தப்படும். 33 சதவீதத்துக்கு மேல் பாதிப்புக்குள்ளான பயிா்களுக்கு நிவாரணம் வழங்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பணி நியமன உத்தரவு வழங்கும் நிகழ்வில், வேளாண்மைத் துறை செயலாளா் சி.சமயமூா்த்தி, வேளாண் விற்பனைத் துறை இயக்குநா் எஸ்.நடராஜன், வேளாண்மைத் துறை இயக்குநா் ஆ.அண்ணாதுரை ஆகியோா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

102 ரன்கள் வித்தியாசத்தில் ஆஸி.யை வீழ்த்தி இந்தியா அபாரம்; சமனில் ஒருநாள் தொடர்!

அமித் ஷா-வை சந்திக்கக் காரணம்…: EPS விளக்கம்! | செய்திகள்: சில வரிகளில் | 17.09.25

ஜெர்மனியில் செந்தேன்... சிவாங்கி!

நட்புக்குள்ளே.... சத்யா தேவராஜன்!

பிரதமர் மோடிக்கு பிரிட்டன் மன்னர் அளித்த பிறந்தநாள் பரிசு! என்ன தெரியுமா?

SCROLL FOR NEXT