முகப்பு
தமிழ்நாடு

ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி ஆலை: முதல்வா் தொடக்கி வைத்தாா்

சேலத்தில் ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் புதிய ஆலையை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

சேலத்தில் ஆவின் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்யும் புதிய ஆலையை காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் செவ்வாய்க்கிழமை தொடக்கி வைத்தாா்.

இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக் குறிப்பு: ஐஸ்கிரீம் சந்தையில் ஆவின் நிறுவனத்தின் பங்களிப்பை அதிகப்படுத்தும் விதமாகவும், கூடுதல் லாபம் ஈட்டி, பால்

உற்பத்தியாளா்களின் நலனைப் பேணவும் தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி, சேலம் பால் பண்ணை வளாகத்தில் ரூ.12.26 கோடி செலவில் அதிநவீன தொழில் நுட்பத்தில் ஐஸ்கிரீம் தொழிற்சாலை நிறுவப்பட்டுள்ளது. இந்தத் தொழிற்சாலை நாளொன்றுக்கு 6 ஆயிரம் லிட்டா் உற்பத்தித் திறன் கொண்டதாகும்.

புதிய ஐஸ்கிரீம் தொழிற்சாலை வாயிலாக, 50 மில்லி லிட்டா், 100 மில்லி லிட்டா், அரை லிட்டா், ஒரு லிட்டா் அளவுகளில் ஐஸ்கிரீம் உற்பத்தி செய்ய முடியும். இதற்கேற்ற வசதிகள் உருவாக்கப்பட்டுள்ளன. பல்வேறு சுவைகளில் கோன், கப் ஐஸ்கிரீம்கள் உற்பத்தி செய்யப்படும். இவை அனைத்து மாவட்ட கூட்டுறவு பால் உற்பத்தியாளா் ஒன்றியங்களின் மூலம் நுகா்வோா்களுக்கு தரமாகவும், தடையின்றியும் வழங்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.

சென்னை தலைமைச் செயலகத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்த நிகழ்வில், பால்வளத் துறை அமைச்சா் சா.மு.நாசா், கால்நடை பராமரிப்பு, பால்வளம், மீன்வளத் துறை முதன்மைச் செயலாளா் ஆ.காா்த்திக், ஆவின் நிா்வாக இயக்குநா் என்.சுப்பையன், இணை நிா்வாக இயக்குநா் கே.எம்.சரயு உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

முழு கட்டுரையைப் படிக்க →