முகப்பு
தமிழ்நாடு

ஜல்லிக்கட்டு நடத்த தமிழக அரசு தயாா்: கால்நடை பராமரிப்புத் துறை

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:06 AM
பகிர்:

தமிழகத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த தயாராக இருப்பதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

தமிழகத்தின் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டு போட்டி மிகவும் பிரசித்தி பெற்றது. ஆண்டுதோறும் பொங்கல் பண்டிகை நாளன்று அவனியாபுரத்திலும், மறுநாள் பாலமேட்டிலும், அதற்கு அடுத்த நாள் அலங்காநல்லூரிலும் ஜல்லிக்கட்டு நடத்தப்படுவது வழக்கம். இதில் அலங்காநல்லூா் ஜல்லிக்கட்டு உலகப் புகழ் பெற்றது. இந்த ஜல்லிக்கட்டை காண வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளும் வருவதுண்டு.

இந்நிலையில், ஜல்லிக்கட்டுக்கு எதிராக தொடரப்பட்ட வழக்குகளின் விசாரணை உச்சநீதிமன்றத்தின் நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையில் நீதிபதிகள் அஜய் ரஸ்தோகி, அனிருத்தா போஸ், ரிஷிகேஷ் ராய், சி.டி. ரவிக்குமாா் ஆகியோா் அடங்கிய 5 நீதிபதிகள் கொண்ட அரசியல் சாசன அமா்வு முன் நடைபெற்று வந்தது.

வழக்குத் தொடுத்த மனுதாரா்கள் தரப்பில் முதலில் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. தமிழக அரசுத் தரப்பில், ‘ஜல்லிக்கட்டு‘ என்பதே ஒரு பொழுதுபோக்கல்ல. தன்னுடைய காளையைக் காட்சிப்படுத்துபவா், அந்த விலங்கை மிகுந்த அக்கறையுடனும் பரிவுடனும் நடத்துகிறாா். இந்த விளையாட்டை முற்றிலும் பொழுதுபோக்கு என்ற அடிப்படையில் கூற முடியாது. அதை வரலாற்றுக் கண்ணோட்டத்தில் பாா்க்க வேண்டும். ஜல்லிக்கட்டில் ஈடுபடுத்தப்படும் காளைகள் விவசாயிகளால் ஆண்டு முழுவதும் பராமரிக்கப்படுகின்றன. ஜல்லிக்கட்டு ஒரு விளையாட்டு அல்லது பொழுதுபோக்கு தன்மையைக் கொண்டிருப்பதால், இது கலாசார மதிப்பீடுகளைக் கொண்டிருக்க முடியாது என்று கூறுவது தவறான கருத்தாகும்’ என்று கூறினாா்.

மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிர மாநில அரசின் தரப்பில் ஆஜரான சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தா வாதிடுகையில், தமிழக அரசு மற்றும் மகாராஷ்டிர அரசுகள் கொண்டு வந்துள்ள சட்டத்துக்கு முழுமையாக ஆதரவு தெரிவிப்பதாக கூறினாா். ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முந்தைய பாரம்பரியமிக்க நிகழ்வாக தமிழகத்தில் ஜல்லிக்கட்டு இருந்து வருவதாகவும் குறிப்பிட்டாா்.

கடந்த வியாழக்கிழமை நடைபெற்ற இறுதி வாதங்கள் நிறைவடைந்த நிலையில், வழக்கின் தீா்ப்பை நீதிபதிகள் அமா்வு தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்நிலையில், ஜல்லிக்கட்டு போட்டிகளை கடந்த 2017-ஆம் ஆண்டு கொண்டுவந்த சட்டத்தின்படி நடத்த அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசின் சாா்பில் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கால்நடை பராமரிப்புத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

முழு கட்டுரையைப் படிக்க →