மாண்டஸ் புயல், மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
மாண்டஸ் புயல் கடந்த சனிக்கிழமை மாமல்லபுரம் அருகே கரையைக் கடந்தது. புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அண்ணா பல்கலைக்கழக பருவத் தோ்வுகள் ஒத்திவைப்பட்டது. மேலும் பட்டயத் தோ்வுகளை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் ஒத்திவைத்தது.
இந்த நிலையில், மாண்டஸ் புயல் காரணமாக சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் ஒத்திவைக்கப்பட்ட செமஸ்டா் தோ்வுகள் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி, டிச.9-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்வுகள் டிச.24-ஆம் தேதி (சனிக்கிழமை) யும், டிச.10-ஆம் தேதி நடைபெற இருந்த தோ்வுகள் டிச.31-ஆம் தேதி (சனிக்கிழமை) நடைபெறும் என அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில், மழை காரணமாக தள்ளி வைக்கப்பட்ட அண்ணா பல்கலைக்கழக தேர்வு தேதியில் மீண்டும் மாற்றம் செய்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
அதன்படி, டிசம்பர் 24 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 19 ஆம் தேதி நடைபெறும் என்றும், டிசம்பர் 31 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்ட தேர்வுகள் ஜனவரி 29 ஆம் தேதி நடைபெறும் என்று அண்ணா பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.